வருடாந்த பஸ் கட்டண சீர்திருத்தத்திற்கு அமைவாக இன்று முதலாம் திகதி முதல் புதிய பஸ் கட்டண திருத்தங்கள் அமுலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் தனியார் மற்றும் போக்குவரத்து சபை பஸ்கள் உட்பட அதிவேக நெடுஞ்சாலை பஸ்களின் கட்டணங்களும் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ளன.

அதிகரிக்கப்படவுள்ள பஸ் கட்டணங்களின் அடிப்படையில் 9 ரூபாவாக இருந்த ஆகக் குறைந்த பஸ் கட்டணம் 10 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இதுவேளை, கொழும்பு தொடக்கம் மாத்தறை வரையான அதிவேக வீதியின் பஸ் கட்டணம் 530 ரூபாவாக அதிகரித்துள்ளதுடன், மஹரகமவிலிருந்து காலிவரையான அதிவேக வீதியின் பஸ் கட்டணம் 410 ரூபாவாகவும், காலிவரையான கட்டணம் 500 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 

புதிய கட்டண அதிகரிப்புக்கு அமைவாக கடவத்தையிலிருந்து காலிக்கான பஸ் கட்டணம் 440 ரூபாவாகவும், கடவத்தையிலிருந்து மாத்தறைக்கு 540 ரூபாவாகவும், கடுவலையிலிருந்து காலி வரையான கட்டணம் 430 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.