இரணைதீவு தெற்கு கடற்பிரதேசத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட உள்ளூர் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

தடைசெய்யப்பட்ட டைனமைற் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி மீன்பிடித்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த 10 மீனவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் மேலும் தெரிவிக்கின்றனர்.

இவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட 11 வலைகள், துடுப்புகள் 11, முகமூடி 11, இரு ஜீ.பி.எஸ் கருவிகள் மற்றும் 29 கிலோகிராம் நிறையுடைய மீன் ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் பொருட்களை கிளிநொச்சி மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.