இன்றைய திகதியில் எம்முடைய இளைய தலைமுறையினர் ஓய்வேயில்லாமல் அலுவலகத்திலும், இல்லத்திலும் கணினியுடன் பணியாற்றி வருகிறார்கள். இது பொருளாதார பார்வையில் கட்டாயமான சூழல் என்றாலும், ஆரோக்கியத்தின் கோணத்தில் இது தவறானது. இதன் காரணமாக தற்போது Nerve Palsy எனப்படும் கை, கைவிரல்கள், மணிக்கட்டு, முழங்கை வரையிலான பகுதிகள் அசைக்கக்கூட இயலாத நிலை ஏற்படுகிறது.

இதற்கான மருத்துவ விளக்கம் என்னவென்று பார்த்தோமானால், உடல் நரம்புகள் பயணிக்கம் பாதையின் வழியில் தொடர்ந்து சில மணி தியாலங்கள் வரை கடுமையான அழுத்தம் ஏற்படும் போது, நரம்புகளுக்கும், தசைகளுக்கும் இடையே உள்ள தொடர்பு துண்டிக்கப்படுகிறது. ஒருசிலருக்கு தசைகளை சிலநாட்கள் வரைசெயலிழக்கச்செய்துவிடும். நரம்புகள் செயலிழக்கும் போது முதலில் பாதிக்கப்படுவது தசைகள் தான்.

இத்தகைய பாதிப்புகளை இயன்முறை மருத்துவம் என்றழைக்கப்படும் பிஸியோதெரபி சிகிச்சைகள் மூலம் இதனை குணப்படுத்த இயலும். ஒரு சிலருக்கு பயிற்சியின் மூலமாகவும், வேறு சிலருக்கு பயிற்சி மற்றும் மின்தூண்டல் சிகிச்சையின் மூலமாகவும் இதற்குநிவாரணம் அளிக்கலாம். 10 நாட்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றால் இத்தகைய பாதிப்பு சீரடையும்.

அதனால் பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் போதிய அளவிற்கு ஒய்வு எடுத்துக் கொள்ளவேண்டியது அவசியம்.இல்லையெனில் இத்தகைய பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.

Dr. செந்தில் குமார்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்