ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் அதிகாரப் பகிர்வுக்கு இணக்கம் தெரிவித்துள்ளன என உயர்­கல்வி மற்றும் நெடுஞ்­சா­லைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல தெரிவித்தார்.

கிளி­நொச்­சியில் யாழ்.பல்­க­லைக்­க­ழக வளா­க­மாக விவ­சாய, பொறி­யியல் பீடங்­களின் வச­தி­களை மேம்­ப­டுத்தும் திட்­டத்தின் கீழ் விவ­சாய பீடத்தில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள மாணவர் திறன் அபி­வி­ருத்தி கட்­ட­டத்­தொ­கு­தியும் பொறி­யியல் பீடத்­திற்­கான இரண்டு மாடிக்­கட்­ட­டமும் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக கைய­ளிக்­கப்­படும்  நிகழ்வு நேற்று வெள்­ளிக்­கி­ழமை நடை­பெற்­றது. 

இந்­நி­கழ்வில் அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் லக்ஷ்மன் கிரி­யெல்ல மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

அவர் மேலும் உரை­யாற்­று­கையில், 

இலங்கை வரலாற்றில்  முதற் தடவையாக பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பங்கேற்புடன் சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைமைகளின் ஒத்துழைப்புடன் அரசியல மைப்பிற்கான செயற்பாடுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. 

மேலும் தேசிய அர­சாங்­கத்­தினை ஆட்­சிக்கு கொண்டு வந்த தமிழ் மக்­க­ளுக்கு நன்­றி. எவ்­வி­த­மான அர­சியல் தலை­யீ­டு­களும் இடம்­பெ­ற­மாட்­டாது.

நாங்கள் பாட­சா­லைக்கு செல்லும் காலத்தில் எங்­க­ளுடை பெற்றோர் யாழ்ப்­பாண மாண­வர்கள் போன்று கல்­வியைப் பயி­லுங்கள் என்று கூறிக்­கொண்டே இருப்­பார்கள்.  

எனக்கு தற்­போதும் மறக்க முடி­யா­த­வொரு விடயம் இருக்­கின்­றது.நான் ரோயல் கல்­லூ­ரியில் கல்வி கற்­றுக்­கொண்­டி­ருக்­கின்றேன். எமது வகுப்­ப­றையில் ஆங்­கில மொழி­மூ­ல­மா­கவே கற்­கை­செ­யற்­பா­டு­களும், கலந்­து­ரை­யா­டல்­களும் நடை­பெறும். எமது வகுப்பில் தமிழ், முஸ்லிம், சிங்­க­ள­வர்கள், என அனைத்து இனத்­த­வர்­களும் இருந்­தார்கள். அக்­கா­லத்தில் சர்­வ­தேச பாட­சா­லைகள் இன்­மையின் கார­ண­மாக சில இரா­ஜ­தந்­தி­ரி­களும் கல்வி கற்­றனர். 

துர­திஷ்­ட­வ­ச­மாக அந்த நிலை­மைகள் ஐம்­ப­து­க­ளுக்குப் பின்னர் மாற்­ற­ம­டைந்­தி­ருந்­தன. மாண­வர்கள் இனங்­களின் அடிப்­ப­டையில் வெவ்­வே­றாக பிரிக்­கப்­பட்­டு­விட்­டனர். மொழி அடிப்­ப­டையில் தனித்­த­னி­யா­கவும் பாட­சா­லைகள் உரு­வாக்­கப்­பட்­டன. 

இந்த நிலை­மைகள் மாற்­ற­ம­டைந்து மீண்டும் மூன்று இனத்­த­வர்­களும் வகுப்­ப­றை­களில் பல்­க­லை­க­ழக பீடங்­களில் ஒன்­றாக கற்­கை­களை மேற்­கொள்ளும் நிலை­மைகள் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். அவ்­வா­றான நிலை­மைகள் உரு­வாக்­கப்­படும் பட்­சத்தில் எமது நாட்­டிற்கு சிறந்த எதிர்­காலம் ஏற்­படும். 

இந்­தியா எமது அயல்­நாடு. பல ஆண்­டு­க­ளாக எமக்கு நன்­கொ­டை­களை வழங்கும் நாடா­க­வுள்­ளது. ஒவ்­வொரு காலப்­ப­கு­தி­யிலும் எமது நாட்டின் தேவை­க­ளுக்கு ஏற்ப பல்­வேறு ஒத்­து­ழைப்­புக்­களை வழங்கி வரு­கின்­றது. இந்­தி­யப்­பி­ர­தமர் நரேந்­திர மோடி இங்கு வருகை தந்­தி­ருந்­த­போது நானும் அவ­ருடன் யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்­தி­ருந்­த­போது பல விட­யங்­களில் கவனம் செலுத்­தி­யி­ருந்தார். நாமும் கவனம் செலுத்­தி­யி­ருந்தோம். அந்த வகையில் இன்­றை­ய­தினம்(நேற்று) வருகை  தந்­துள்ள இந்­திய உயர்ஸ்­தா­னி­க­ருக்கு எனது நன்­றி­களைத் தெரி­வித்­துக்­கொள்­கின்றேன்.

கிளி­நொச்சி பல­ச­ம­யங்­களில் உச்­ச­கட்ட மோதல்கள் இடம்­பெற்ற பகு­தி­யாக காணப்­ப­டு­கின்­றது. தற்­போது இங்கு ஒரு பல்­க­லைக்­க­ழகம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­மை­யா­னது சிறந்­த­தொரு விட­ய­மா­கவே கரு­து­கின்றேன். புதிய அர­சாங்­கத்­தினை தமிழ் மக்­க­ளான நீங்­களே ஆட்­சிக்கு கொண்டு வந்­தி­ருந்­தீர்கள். புதிய அர­சாங்­கத்தின் கொள்­கை­களை அங்­கீ­க­ரித்­தி­ருந்­தீர்கள். தமிழ் மக்­க­ளுக்கு எனது நன்­றி­களைத் தெரி­வித்­துக்­கொள்­கின்றேன். 

பல்­க­லைக்­க­ழ­கங்கள்   சுயா­தீ­ன­மாக செயற்­படும் கொள்­கை­யி­னையே அர­சாங்கம் கொண்­டி­ருக்­கின்­றது. அதில் அர­சியல் தலை­யீ­டுகள் இருப்­பதை நாம் அங்­கீ­க­ரிக்­க­வில்லை. துணை­வேந்­தர்­க­ளுக்­கான அதி­கா­ரங்­களின் பிர­காரம் சுயா­தீ­ன­மாக அவர்கள் நிரு­வா­கத்­தினை முழு­மை­யான முன்­னெ­டுப்­ப­தற்கு இட­ம­ளிக்­கப்­ப­டு­வதே எமது நோக்­க­மாகும். 

புதிய ஆட்­சியில் துணை­வேந்­தர்கள் சுயா­தீ­ன­மாக செயற்­ப­டு­வ­தற்­கான நிலை­மைகள் ஏற்­பட்­டுள்­ளன என்று நம்­பு­கின்றோம். பல்­க­லைக்­க­ழ­கங்­களின் நிரு­வா­கத்­திற்கு தீர்­மானம் எடுக்­கின்ற உரி­மையை வழங்­கு­கின்ற போது தான் சிறந்த முன்­னேற்­றங்­களை காண முடியும். நான் உயர்­கல்வி அமைச்சர் என்ற வகையில் உயர்­கல்­வித்­து­றையை முன்­னேற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­க­கைளை அர்ப்­ப­ணிப்­புடன் முன்­னெ­டுத்து வரு­கின்றேன். 

துணை­வேந்­தர்கள் சுயா­தீ­ன­மாக பல்­க­லைக்­க­ழங்­களில் செயற்­ப­டு­வ­தற்கும் அர­சியல் தலை­யீ­டு­க­ளற்ற சூழலில் நிரு­வா­கத்­தினை முன்­னெ­டுப்­ப­தற்கும் நாம் எப்­போ­துமே உங்­க­ளுக்கு உறு­து­ணை­யாக இருப்போம். 

தேசிய அர­சாங்­கமும் பாரா­ளு­மன்­றத்­தினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டு­து­கின்ற அர­சியல் கட்­சி­களும் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கும் செயற்­பா­டு­களில் பங்­கேற்­றுள்­ளன. கடந்த காலத்தில் இரண்டு புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. 1972ஆம் ஆண்டு முதற்­த­ட­வை­யாக புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டது. 1978ஆம் ஆண்டு இரண்­ட­வாது தட­வை­யாக புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டது.

இருப்­பினும் இந்த இரண்டு சந்­தர்ப்­பங்­க­ளிலும் தமிழ் அர­சியல் கட்­சிகள் அதில் பங்­க­ளிப்­புக்­களைச் செய்­தி­ருக்­க­வில்லை. அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கும் செயற்­பா­டு­க­ளின்­போது தமிழ் அர­சியல் கட்­சிகள் புறக்­க­ணிப்­பி­னையே செய்­தி­ருக்­கின்­றன. அவ்­வா­றி­ருக்­கையில் வர­லாற்றில் முதற்­த­ட­வை­யாக பாரா­ளு­மன்­றத்தில்   வட்­ட­மே­சையில் அமர்ந்து புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­கான புது வரை­பொன்றை தயா­ரிக்கும் செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டுள்ளோம். 

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் ஐக்­கிய தேசியக் கட்­சியும் அதி­கா­ரப்­ப­கிர்­வுக்கு சம்­மதம் தெரி­வித்­துள்­ளன. முதற்­த­ட­வை­யாக பாரா­ளு­மன்­றத்­தினை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் கட்­சி­களின் பங்­கேற்­புடன் சிங்­கள, தமிழ், முஸ்லிம் தலை­மை­களின் பங்­கேற்­புடன் அர­சி­ய­ல­மைப்­பிற்­கான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­ன­றன. 

1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்­திரம் அடைந்­த­போது ஆசிய மற்றும் உலக நாடு­களில் உள்ள அனை­வரும் இலங்­கையை முன்­மா­தி­ரி­யாக பார்த்­தார்கள். உதா­ர­ண­மாக சிங்­கப்பூர், மலே­சியா போன்ற நாடுகள் எங்­க­ளு­டைய இலக்கு இலங்­கை­யைப்­போன்று வரு­வ­தாகும் என்று கூறின.  

ஆனால் 1950களில் இன­வாத அர­சியல் தலை­தூக்­கி­யது. அதி­கா­ரத்­தினை தம­தாக்­கு­வதே பிர­தான இலக்­காக இருந்­தது. யாரும் விரும்­பாத ஆயுத கலா­சாரம் தோற்றம் பெற்­றது. தற்­போது முப்­பது வரு­ட­காலம் வீணாக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது இன­வாத அர­சியல் சம்­பந்­த­மாக அனைத்து கட்­சி­களும் தம்மை மீட்­டிப்­பார்த்து ஒரு முடி­வுக்கு வந்­துள்­ளன.

அத­ன­டிப்­ப­டை­யி­லேயே அனைத்து கட்­சி­களின் பிர­தி­நி­தி­களும் வட்­ட­மே­சைக்கு வந்­துள்­ளார்கள் என்று . நான் நினை­கின்றேன் அர­சி­ய­ல­மைப்பின் இடைக்­கால அறிக்கை எதிர்­வரும் ஆகஸ்ட், செப்­டம்­பரில் சமர்ப்­பிப்­ப­தற்கு தீர்­மா­னித்­துள்ளோம். அத்­துடன் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்கும் நாம் திட்­ட­மிட்­டி­ருக்­கின்றோம்.

இதே­வேளை மீண்டும் ஒரு தடவை நான் பழைய பசுமையான நினைவொன்றை மீட்டிப்பார்க்கின்றேன். அதாவது நாங்கள் பாடசாலை மாணவர்களாக கல்விச் சுற்றுலா வந்த காலத்தில் யாழ்ப்பாணத்தின் சென்.பற்றிக்ஸ்,  சென்.ஜோன்ஸ் பாடசாலைகளின் விடுதிகளில் தான் தங்குவோம். அவர்கள் கொழும்புக்கு வருகின்ற போது அவர்களுக்கு கோட்டை புகையிரத நிலையத்தில் வரவேற்பினை நாம் வழங்குவோம். அவ்வாறானதொரு சகாப்தம் இருந்தது. அந்த சகாப்பதத்தினை மீண்டும் வெகுவிரைவில் உருவாக்க வேண்டும்.  

இங்கு பல்கலைக்கழகத்தினை உருவாக்குவதற்காக நன்கொடையளித்த இந்தியாவிற்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.  இங்கு யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் இருக்கின்றார்கள். நான் அவரை இன்று தான் முதன் முதலில் காண்கின்றேன். அவருடன் தொலைபேசியில் பேசியது கூட இல்லை. ஆகவே எமது காலத்தில் எந்தவிதமான அரசியல் தலையீடுகளும் இருக்காது. நீங்கள்(துணைவேந்தர்) திறப்பட உங்களது நிருவாகத்தினை முன்கொண்டு செல்லுங்கள் என்றார்.