இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு வருகை தரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவரை ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடுத்த முயன்றதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் இவரிடம் வாக்குமூலம் பெற அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் ஜெரி வெளடர்ஸ் இன்று  பொலிஸ் நிதி மோசடி பிரிவில் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.