பதுளை ரில்பொல 2 ஆம் மைல் கல்லருகே வேனொன்று வீதியைவிட்டு விலகி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் 17 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதுளையைச் சேர்ந்த ரில்பொல 2 ஆம் மைல் கல்லருகே இன்று பிற்பகல் 3 மணியளவில் பள்ளாகெட்டுவ என்ற இடத்திலிருந்து பதுளை வழியாக அநுராதபுரம் சென்ற வேனே வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.  

இவ்விபத்தில் வேனில் பயணித்த 17 பேர் கடும் காயமடைந்த நிலையில் பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்தில் சாரதி உட்பட மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பதுளை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. 

இவ்விபத்து தொடர்பாக பதுளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமையாலேயே குறித்த விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவிக்கினறனர்.