நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை கேம்பிரீஜ் கல்லூரியில் பணிபுரிந்து வரும் இரு ஆசிரியர்கள் தாக்கபட்டதில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்று வியாழகிழமை காலை கல்லூரியின் காலைக்கூட்டத்தின் போது 13பாடாசலை சிறுமிகளை கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் இரும்பினால் தாக்கியமை தொடர்பில் குறித்த 13மாணவிகளும் குறித்த ஆசிரியர் தாங்களை இரும்பினால் தாக்கியதாக பெற்றோர்களிடம் அறிவித்து தெரிவித்திருந்தனர்.

சம்பவத்தை அறிந்த பெற்றோர் இன்று வெள்ளிகிழமை காலை குறித்த ஆசிரியரை சந்தித்து கலந்துரையாட சென்றபோது குறித்த ஆசிரியர் கல்லூரியின் மாணவர்களை தூண்டிவிட்டு பெற்றோர்களை தாக்கும்படி மாணவர்களுக்கு கட்டளையிட்டுள்ளார்.

ஆசிரியரின் கட்டளைக்கு அமைய மாணவர்கள் பெற்றோர்களை தாக்க முயற்சித்த போது இரண்டு ஆசிரியர்கள் தாக்கபட்டு டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக திம்புள்ளை பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கல்லூரியின் பாதுகாப்புகருதியும் மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கபட்டிருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.