பாடசாலை மாணவிகளை அழைத்து செல்லும் ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அறைகளை வழங்கிய ஹோட்டல் முகாமையாளர் நேற்று முன்தின இரவு களுத்துறை பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை, நாகொடையில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் சேவை புரியும் 20 வயதுடைய முகாமையாளர் பாடசாலை மாணவிகளை  அழைத்து செல்லும் ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அறைகளை வழங்கி வந்துள்ளார்.

குறித்த நடவடிக்கையினால் ஆசிரியர் ஒருவரால் கர்ப்பமான 15 வயதுடைய மாணவியால், பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட இளைஞர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.