காஷ்மோரா, காற்று வெளியிடை படத்தின் தோல்விக்கு பிறகு கார்த்தி தற்போது நம்பிக்கையுடன் நடித்து வரும் படம் தீரன் அதிகாரம் ஒன்று. இந்த படத்தை சதுரங்க வேட்டை என்ற வெற்றிப் படத்தை இயக்கிய இயக்குநர் வினோத் இயக்கி வருகிறார். இதன்  பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது.

இதனைத் தொடர்ந்து மாநகரம் என்ற படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் கார்த்தி.

இதனிடையே நடிகர் கார்த்தி சுசீந்திரன் இயக்கத்திலும், பிரபுதேவாவின் இயக்கத்தில் கருப்பு ராஜா வெள்ளை ராஜா என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : சென்னை அலுவலகம்