சீனாவின் 21ஆவது கடற்படையின் விஷேட பாதுகாப்பு கப்பல்கள் மூன்று  இலங்கைக்கு வந்தடைந்துள்ளன. 

சீனக் கடற்படையின் மிக முக்கிய வழிகாட்டல் ஏவுகணை போர்க் கப்பல்களான லியூசோ, சன்யா ஆகியனவும், விரிவான விநியோக கப்பலான கிங்ஹாய்ஹ_வு ஆகிய மூன்று கப்பல்களே கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. 

இந்தக் கப்பல்களுக்கு கொழும்பிலுள்ள சீனத் தூதுவர் யி ஜியான்லியாங் மற்றும் குழுவினர் சிறப்பாக வரவேற்பளித்துள்ளனர். 

இந்த மூன்று யுத்தக் கப்பல்களும் ஆசியாவில் விஜயம் செய்யும் இரண்டாவது இடமாக கொழும்பு அமைந்துள்ளது. இதற்குமுன் பாகிஸ்தான் கராச்சி நகரை சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.