மகளிர் உலக்கிண்ண தொடரின் இன்றைய போட்டியில் அவுஸ்ரேலியாவுடன் மோதுகின்ற இலங்கை அணி சார்பாக சாமரி அதபத்து தனது அதிரடி துடுப்பெடுத்தாட்டத்தினை வெளிபடுத்தியுள்ளார்.

இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற அவுஸ்ரேலியா அணி இலங்கையினை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது. அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில், 9 விக்கட்டுகளை இழந்து 257 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் அதிரடியாக ஆடிய சாமரி அதபத்து 143 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 22 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக  173 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

மகளிர்  உலக்கிண்ண தொடரில்  இலங்கை அணி சார்பாக முதலாவது சதத்தினை பெற்றவர் என்ற பெருமையினை சாமரி அதபத்து பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.