(க.கமலநாதன்)

பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்குதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டாலும் நாட்டிற்கு பாதகமான மாற்று சட்டமூலம் கொண்டுவரப்படாதென நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

நீதி அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது எமது நாட்டிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினை முற்றாக நீக்கிவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைகப்பட்டுள்ளன. அது தொடர்பிலான விவகாரம் தற்போதும் உத்தேச மட்டத்திலேயே உள்ளன.

எவ்வாறாயினும் இந்த சட்டத்தினை நீக்கிவிட்டோ அல்லது மாற்றம் செய்துவிட்டோ அரசாங்கத்தினதும் நாட்டினதும் பாதுகாப்பிற்கு பாதகமான ஒரு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று நாம் ஒருபோதும் சிந்திக்கவில்லை.