(எம்.எம்.மின்ஹாஜ்)

சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே அரசியலமைப்பினை தயாரிப்போம் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது.

பிட்ட கோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா  கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தற்போதைய அரசியலமைப்பில் திருத்தங்கள் செய்ய மாட்டோம். திருத்தங்களின்றி புத்தம் புதிய அரசியலமைப்பையே கொண்டு வரவுள்ளோம். 

இந்த விடயத்தில் சுதந்திரக் கட்சியை இணக்கப்பாட்டுக்கு கொண்டு வருவோம். சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே அரசியலமைப்பினை தயாரிப்போம்.

 

இன்னும் ஓரிரு மாதங்களில் உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படும். உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு பின்னரே மாகாண சபை தேர்தல் நடத்தப்படும். ஆகவே ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலின் போட்டியிட்டு வெற்றி பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.