வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சாட்சிப் பதிவு ; மன்றிலிருந்து ஊடகவியலாளர்கள் வெளியேற்றம்

Published By: Priyatharshan

29 Jun, 2017 | 11:44 AM
image

(ரி. விரூஷன்)

புங்குடுதீவு வித்தியா படுகொலை வழக்கு இன்றைய தினம் 2 ஆவது நாளாக சாட்சிப் பதிவுகள் யாழ். மேல் நீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள ட்ரயல் அட்பார் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது வழக்கின் மிக முக்கிய சட்சியான உதயசூரியன் சுரேஸ்கரன் என்பவரது சாட்சிப்பதிவின் போது மன்றிலிருந்து ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் ட்ரயல் அட்பார் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இம் முக்கிய 5 ஆவது சாட்சியான உதயசூரியன் சுரேஸ்கரன் என்பவர் இவ் வழக்கின் 12 ஆவது சந்தேக நபராவார்.

இவர் சட்டமா அதிபரின் நிபந்தனையுடனான மன்னிப்பின் அடிப்படையில்  அரசதரப்பு சாட்சியாக மாற்றப்பட்டதுடன் இவரது சாட்சியினை மையமாகக் கொண்டு இவ் வழக்கின் எதிரிகளான குற்றவாளிகளை நிரூபிக்கப்போவதாக வழக்குத்தொடுநர் தரப்பினால் ஏற்கனவே மன்றில் குறிப்பிட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் குறித்த 5 ஆவது சாட்சியான உதயசூரியன் சுரேஸ்கரனின் சாட்சிப் பதிவுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கையில், குறித்த சாட்சி தான் இந்த நீதிமன்றில் சாட்சியளிப்பதன் ஊடாக தனது குடும்பத்திற்கு அச்சுறுத்தல், பாதிப்பு ஏற்படுமென பகிரங்கமாக மன்றில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து மன்றானது சாட்சியின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்கப்படுமென தெரிவித்திருந்த போதும் பின்னர் ட்ரயல் அட்பார் நீதிமன்ற 3 நீதிபதிகளின் ஏகமனதான முடிவின்படி அவரது சாட்சிப்பதிவை மேற்கொள்வதற்காக மன்றிலிருந்த ஊடகவியலாளர்களும் பொதுமக்களும் வெளியேற்றப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோப் குழுவிலிருந்து மரிக்கார் இராஜினாமா!

2024-03-19 16:40:26
news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49