"வாலி­பங்கள் ஓடும் வய­தா­கக்­கூடும் ஆனாலும் அன்பு மாறா­தது மாலை­யிடும் சொந்தம் முடி­போட்ட பந்தம் பிரி­வென்னும் சொல்லே அறி­யா­தது அழ­கான மனைவி அன்­பான துணைவி அமைந்­தாலே பேரின்பமே..." என்ற கவிஞர் வாலியின் வரி­களில் எத்­தனை ஆயிரம் உண்­மைகள் பொதிந்து இருக்­கின்­றன என்­பதை இப்­போது மீட்­டிப்­பார்க்க வேண்­டி­ய­தொரு சூழல் தற்­போது ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. 

இல்­லறம் என்­றுமே நல்­ல­ற­மாக அமையும் என்ற தீர்க்­க­மான நம்­பிக்­கையில் வாழ்­வைத்­தொ­டங்கும் விவ­சாயி முதல் ஆட்சி அதி­காரம் கொண்ட தலை­வர்கள் வரை­யி­லான எத்­த­கைய தரப்­பி­னரும் ஏதோ­வொரு சந்­தர்ப்­பத்தில் வாழ்க்­கையின் துணை என்று அதீத நம்­பிக்­கை­கொண்­டி­ருந்த துணை­வி­யாரை முழு­மை­யாக பிரியும் போது அவர்கள் எடுக்கும் முடி­வுகள் பார­தூ­ர­மா­கவும் இருந்­தி­ருக்­கின்­றன. 

அவ்­வா­றா­ன­தொரு குரூ­ர­மான சம்­பவம் நாட்டின் தென்­ப­கு­தியில் இடம்­பெற்று பேர­திர்ச்­சியை அளித்­துள்­ளது. அச்­சம்­ப­வத்தின் உட்­கி­டைக்கை­களை பார்க்­கின்ற போது குடும்­பங்­களின் பின்­னலில் உரு­வா­கி­யி­ருக்கும் முழு மானிட சமூ­க­முமே தன்­னைத்­தானே சுய­ப­ரீட்சை செய்து கொள்­ள­வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்­டிருக்­கின்­றதா என்ற வினா இயல்­பா­கவே எழு­கின்­றது. 

ஆம், இற்­றைக்கு இரண்டு தசாப்­தங்­க­ளுக்கு முன்னர் இரு­ம­னங்­களும் ஒரு­ம­ன­மாக கம்­பு­றுப்­பிட்­டிய,  ரன்­சே­கொட வெரலி அத்­துர கிரா­மத்தில் பல்­வேறு எதிர்­பார்ப்­பு ­க­ளுடன்  விக்­கி­ர­ம­துங்க ஆராச்சி பத்­தி­ர­ணகே பிரி­யந்த தனது வாழ்க்கை துணை­யுடன் இல்­ல­ற­ வாழ்வை ஆரம்­பித்­தி­ருக்­கின்றார்.

நாட்கள் நகர்ந்­தன, இனி­மை­யான இல்­ல­றத்தின் பய­னாக மூத்­தது ஆண்­கு­ழந்தை, அடுத்து பெண் குழந்­தைகள், அடுத்து ஆண் குழந்­தையும் அதற்­க­டுத்­த­தாக பெண்­கு­ழந்தை என நான்கு குழந்­தைகள் கிடைத்­தன.  

இவ்­வாறு நகர்ந்து கொண்­டி­ருந்த விக்­கி­ர­ம­துங்க ஆராச்சி பத்­தி­ர­ணகே பிரி­யந்­தவின் குடும்­பத்­தினை வறுமை சூழ்ந்து கொண்­டது. அன்­றாட வாழ்க்­கை­யினை கொண்டு நடத்­து­வ­தற்கு நெருக்­கடி நிலை­மைகள் எழுந்­தன  விக்­கி­ர­ம­துங்க ஆராச்சி பத்­தி­ர­ணகே பிரி­யந்­த­விற்கும் மனை­விக்கும் இடையில் அவ்­வப்­போது முரண்­பா­டு­களும் வாய்ச்­சண்­டை­களும் வர ஆரம்­பித்­தன. 

ஏற்­க­னவே குடும்­பத்தின் வறுமை ஒரு­புறம், பௌத்த தர்­மத்தின் பற்று மற்­றொரு புறம் என இரண்டு மன­நி­லையில் தமது இரண்டு ஆண் மகன்­க­ளையும் பௌத்த மத குரு­மார்­க­ளாக்­கு­வ­தற்­கான கற்கை நெறியை தொடர்­வ­தற்கு  விக்­கி­ர­ம­துங்க ஆராச்சி பத்­தி­ர­ணகே பிரி­யந்­தவும் மனை­வியும் தீர்­மா­னித்­தி­ருந்­தனர். 

அந்த இரண்டு ஆண் பிள்­ளை­களும் குடும்­பத்­தினை விட்டுச் சென்­றி­ருந்­தாலும் குடும்­பத்தின் வாழ்­வா­தா­ரத்­தினை முன்­கொண்டு செல்ல முடி­யாத நெருக்­கடி நிலை­மைகள் தொடர்ந்­த­வாறே இருந்தன இதன் வெளிப்­பா­டாக கணவன் மனை­விக்­கி­டையே வாய்ச்­சண்டை, சச்­ச­ர­வுகள் ஏற்­ப­ட­லா­யின. அவை சில சம­யங்­களில் உச்ச கட்­ட­த்தி­னை­யும் அடை­வ­துண்டு.

குடும்ப சச்­ச­ர­வுகள் என்­பதால் சத்­தங்கள் கேட்­டாலும் இவர்­களின் வீட்­டைச்­சுற்­றி­யி­ருக்கும் அய­ல­வர்கள் அதிகம் தலை­யீடு செய்­வ­தில்லை. கண்டும் காணா­தது போல இருந்து விடு­வார்கள். வறு­மையால் தான் தமக்­கி­டையே பிரச்­சி­னைகள் எழு­கின்­றன என உணர்ந்­தாரோ என்­னமோ விக்­கி­ர­ம­துங்க ஆராச்சி பத்­தி­ர­ணகே பிரி­யந்­தவின் மனைவி தான் வெளிநாடு ஒன்­றிற்குச் சென்று தொழில் புரிந்து சம்­பா­திக்­கின்றேன் என்ற கோரிக்­கையை கண­வ­னி­டத்தில் முன்­வைத்­துள்ளார். எனினும் அதற்கு விக்­கி­ர­ம­துங்க ஆராச்சி பத்­தி­ர­ணகே பிரி­யந்த ஒத்­துக்­கொள்­ள­வில்லை. இதன் கார­ணத்­தினால் அண்­மைக்­கா­ல­மாக அவர்­க­ளுக்­கி­டையில் கருத்து மோதல்கள் வெகு­வாக எழுந்­தன. 

அவ்­வா­றான மோதல்­களின் உச்­ச­பட்­ச­மாக விக்­கி­ர­ம­துங்க ஆராச்சி பத்­தி­ர­ணகே பிரி­யந்­தவின் மனைவி தனது கண­வ­னையும் பிள்­ளை­க­ளையும் விட்டுச் செல்­வ­தென்ற கடி­ன­மான முடி­வொன்றை எடுத்து சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் தனி­யாகச் சென்று விடு­கின்றார்.

அதன் பின்னர் தற்­போது வரையில் அவர் எங்கு சென்றார்? உள்­நாட்டில் இருக்­கின்­றாரா? வெளி­நாடு சென்­றாரா? என்ற எந்த வித­மான தக­வல்­களும் இல்­லாத நிலை­மையே நீடித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது. 

இவ்­வா­றி­ருக்­கையில் தான் 26ஆம் திகதி திங்கட்கிழமை விக்­கி­ர­ம­துங்க ஆராச்சி பத்­தி­ர­ணகே பிரி­யந்­தவின் வீட்டின் பின்­புறம் திடீ­ரென தீப்­பற்றி எரிந்து கொண்­டி­ருக்­கின்­றது. அங்கு விக்­கி­ர­ம­துங்க ஆராச்சி பத்­தி­ர­ணகே பிரி­யந்­தவின் மனை­வியும் இல்லை. பெண் பிள்­ளைகள் இரண்டும் தந்­தையும் தான் இருக்­கின்­றார்கள். திடீ­ரென தீ எரி­கின்­றதே காரணம் என்­ன­வாக இருக்கும் என்ற ஐயப்­பாட்­டுடன் அய­ல­வர்கள் கம்­பு­றுப்­பிட்­டிய பொலிஸ் நிலை­யத்­திற்கு பொலிஸ் அவ­சர இலக்கம் ஊடாக ரன்­சே­கொட வெரலி அத்­துர பகு­தியில் வீடொன்று தீப்­பற்றி எரி­கின்­றது என்ற அறி­விப்பை செய்­துள்­ளனர்.

அறி­விப்பு கிடைத்த அடுத்த நொடியே கம்­பு­றுப்­பிட்­டிய பொலிஸார் அவ்­வி­டத்­திற்கு விஜயம் செய்­தனர். வீடு தீக்­கி­ரை­யா­கிய நிலையில் வீட்டின் முற்­றத்தின் அந்த  பேர­திர்ச்­சி­யான காட்­சியை பொலிஸார் காண்­கின்­றனர். 

முற்­றத்தில் இருந்த பலா மரத்­திற்கும் மகோ­கனி மரத்­திற்கும் இடையில் முப்­பது அடி­யான பல­கை­யொன்று காணப்­ப­டு­கின்­றது. அதற்கு மேலே நான்கு உட­லங்கள் தூக்கில் தொங்­கிக்­கொண்­டி­ருக்­கின்­றன. அதனைக் கண்ட பொலிஸார் உட­ன­டி­யாக கம்­பு­றுப்­பிட்­டிய பொலிஸ்­ நி­லைய பொறுப்­ப­தி­காரி ஓ.ஏ.யு.விஜ­ய­சாந்­த­விற்கு தெரி­யப்­ப­டுத்­தினர். 

இத­னை­ய­டுத்து குறித்த சம்­பவம் குறித்து பொலிஸ் தரப்பு விசா­ர­ணைக்­கான தனது செயற்­பா­டு­களை துரி­தப்­ப­டுத்­தி­யது. மாத்­தறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்­சிறி ஜெயந்­தவின் பணிப்பில், பொலிஸ் அத்­தி­யட்­சகர் மரப்­ப­னவின் வழி­காட்­டலில் உதவி அத்­தி­யட்­சகர் புத்­திக்க விஜ­ய­நாக்­கவின் ஒருங்­கி­ணைப்பில் ஓ.ஏ.யு.விஜ­ய­சாந்­தவின் தலை­மையில் நட­வடிக்­கைகள் எடுக்­கப்­பட்­டன.

அத­ன­டிப்­ப­டையில் தொங்­கிய நிலையில் இருந்த உட­லங்­களை மீட்ட பொலிஸார்  உட­ன­டி­யாக பரி­சோ­த­னை­களை ஆரம்­பித்­தனர். அந்த பரி­சோ­த­னை­களின் பிர­காரம், 44 வய­தான விக்­கி­ர­ம­துங்க ஆராச்சி பத்­தி­ர­ணகே பிரி­யந்த என்ற தந்தை  தனது 16 வய­து­டைய கௌசல்யா செவ்­வந்தி, 10 வய­துடைய கிருணி செவ்­வந்­திகா ஆகிய இரு பெண்­பிள்­ளை­களும் 14 வய­து­டைய ரன்­கே­கொட மங்­கள தேரர் ஆகிய மூவரின் கைக­ளையும் கட்­டிய பின்னர் அவர்­களை தங்­குதன் நூல் ­கொண்டு தூக்­கி­லிட்­டுள்ளார். 

அத­னை­ய­டுத்து தனது உயிரை மாய்ப்­ப­தற்கு முன்­ன­தாக வீட்­டிற்கு பின்­பு­ற­மாக சென்று தீயை மூட்­டி­விட்டு தானும் தூக்­கி­லிட்­டுள்ளார் விக்­கி­ர­ம­துங்க ஆராச்சி பத்­தி­ர­ணகே பிரி­யந்த. 

பொதியில் இருந்­தது துணையின் பிரிவால் ஏற்­பட்ட ஆதங்கம்

இவ்­வா­றான நிலையில் சட­லங்­க­ளுக்கு அருகில் இருந்து பொதி­யொ­ன்றை மீட்­டுள்ள பொலிஸார் அதற்குள் என்ன இருக்­கின்­றது என்­பதை ஆராய ஆரம்­பித்­தனர். தனது துணை­வியின் பிரிவால் மனதில் எழுந்த சோகங்­களை வெளிப்­ப­டுத்தும் வகை­யி­லான விக்­கி­ர­ம­துங்க ஆராச்சி பத்­தி­ர­ணகே பிரி­யந்­தவின் கடி­தங்கள் மற்றும் அவரின் திரு­மண புகைப்­ப­டங்கள், குடும்­பத்­தி­ன­ருடன் எடுத்­துக்­கொண்ட புகைப்­ப­டங்கள் என அனைத்தும் இருந்­தன.

கடி­தங்­களின் ஒவ்­வொரு வரி­களும்  விக்­கி­ர­ம­துங்க ஆராய்ச்சி பத்­தி­ர­ணகே பிரி­யந்த தனது மனை­வியின் பிரி­வினால் அடைந்த துய­ரத்­தினை வெளிப்­ப­டுத்­து­வ­தா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது. துணையின் மீதி­ருந்த ஆழ்ந்த அன்பின் கார­ண­மா­னதால் அவ­ரு­டைய பிரிவை தாங்க முடி­யா­ததன் கார­ணத்­தி­னா­லேயே இத்­த­கைய முடி­வொன்­றினை எட்­டி­யி­ருக்­கின்றார் விக்­கி­ர­ம­துங்க ஆராய்ச்சி பத்­தி­ர­ணகே பிரி­யந்த என்ற எண்­ணங்கள் எம்­ம­னதில் எழுந்­தி­ருந்­தாலும் பொலி­ஸாரின் அடுத்த கட்ட விசா­ர­ணை­களில் வெளிப்­பட்ட தக­வல்கள் அதனை மாற்­றி ­வி­டு­கின்­றன.

பிள்­ளை­களை மாய்க்கும் விட­யத்­தினை முன்­கூட்­டியே திட்­ட­மி­ருக்­கின்­றாரா? 

16 வய­து­டைய கௌசல்யா செவ்­வந்­தி­காவும் 10 வய­துடைய கிருணி செவ்­வந்­தி­காவும் கல்­வியில் சுட்­டி­க­ளாக இருந்­துள்­ளனர். இந்­தாண்டின் கிருணி செவ்­வந்­திகா புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்கு தோற்­ற­வி­ருந்த நிலை­யிலும், கௌசல்யா செவ்­வந்­திகா கல்­விப்­பொதுத் தராதர சாதா­ரண தர ­ப­ரீட்­சைக்கு தோற்­ற­வி­ருந்த நிலையிலேயே தந்­தையின் வடிவில் வந்த காலன் அவர்­களை உலகை விட்­டுப்­பி­ரித்து சென்­றி­ருக்­கின்றார்.

அந்த இரண்டு பெண்­பிள்­ளை­களின் நிலை­மைகள் இவ்­வாறு இருக்­கையில் விக்­கி­ர­ம­துங்க ஆராய்ச்சி பத்­தி­ர­ணகே பிரி­யந்­தவின் கடை­நிலைப் புதல்­வ­னான ரன்­கே­கொட மங்­கள தேரர் விஹா­ரை­யொன்றில் கல்வி கற்று வந்­துள்ளார். சம்­பவம் நடப்­ப­தற்கு முதல் நாள் அந்த விஹா­ரைக்குச் சென்­றுள்ள விக்­கி­ர­ம­துங்க ஆராய்ச்சி பத்­தி­ர­ணகே பிரி­யந்த தனது மகனை வீட்­டுக்கு கூட்டிச் செல்­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிக்­கு­மாறு விகா­ரா­தி­பதி­யிடம் அனு­மதி கோரி­யுள்ளார்.

எனினும் அவ­ருக்கு (ரன்­கே­கொட மங்­கள தேர­ருக்கு)கற்­ற­லுக்­கான பாட­நெ­றிகள் அதிகம் இருக்­கின்­றன. தற்­போது அவரை அனுப்ப முடி­யாது. அவர் கல்­வி­யிலும் அதி­ளவு ஆர்வம் காட்­டு­கின்றார் என்று விகா­ரா­தி­பதி குறிப்­பிட்ட போதும் இரண்டு நாட்­களில் கொண்டு வந்து விட்டு விடு­கின்றேன் என்று கூறியே தனது மக­னான  ரன்­கே­கொட மங்­கள தேரரை அழைத்து வந்­தி­ருக்­கின்றார் விக்­கி­ர­ம­துங்க ஆராச்சி பத்­தி­ர­ணகே பிரி­யந்த.

தன்­னையும் தனது பிள்­ளை­க­ளி­னதும் உயிரை மாய்க்கும் சிந்­தனை அவ­ரு­டைய மனதில் எழுந்­ததன் பிற்­பாடு தான் தனது கடை­நிலைப் பிள்­ளையை வீட்­டுக்கு அழைத்து வந்­தாரா? அவ்­வா­றென்றால் முன்­கூட்­டியே இவற்றை திட்­ட­மிட்­டி­ருக்­கின்­றாரா என்ற கேள்­விகள் எல்லாம் மேலெ­ழு­கின்­றன.  எனினும் இரத்­த­ின­பு­ரியில் உள்ள விஹா­ரையில் தங்­கி­யுள்ள தனது மூத்­த­மகன் தொடர்­பாக விக்­கி­ர­ம­துங்க ஆராச்சி பத்­தி­ர­ணகே பிரி­யந்த எவ்­வி­த­மான சிந்­த­னை­யையும் செய்­ய­வில்லை என்­ப­தையும் கவ­னித்­தாக வேண்­டி­யுள்­ளது.

சம்பவம் இடம்பெற்ற நாளன்று வீட்டிலிருந்து சகோதிரி ஒருவர் இந்த மூத்த சகோதரருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு' அண்ணா , அப்பா எங்களின் கைகளைக் கட்டி கொலை செய்வதற்கு முயற்சிக்கின்றார் என தெரிவித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஆனாலும் பொலிஸார் மேற்கொண்டுள்ள சோதனைகளின் போது கிடைக்கப்பெற்ற கடிதத்தில் தாங்கள் அனைவரும் சுயவிருப்பின் பேரிலேயே தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. தெயந்­தர நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி ஹர்ச பெல்­பொல ஸ்தலத்திற்கு வரு­கை­தந்து அவர் முன்­னி­லையில் பரி­சோ­த­னைகள் நடை­பெற்ற பின்னர் மாத்­தறை மாவட்ட வைத்­திய சாலையில் பிரேத பரி­சோ­த­னைகள் இடம்­பெற்­றன. இதன்­போது கழுத்தை இறுக்­கி­யதால் மர­ணங்கள் சம்­ப­வித்­தி­ருப்­ப­தா­கவும், 16வய­து­டைய கௌசல்யா செவ்­வந்­தி­காவின் உடலில் இருந்து இரத்தக் கசிவு ஏற்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அந்த இரத்­தக்­க­சிவு தங்­குதன் நூல் இறு­கி­ய­மையால் ஏற்­பட்­டி­ருக்­கலாம் எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இரத்­தி­ன­பு­ரியில் உள்ள விஹா­ரையில் தங்­கி­யுள்ள விக்­கி­ர­ம­துங்க ஆராச்சி பத்திரணகே பிரியந்தவின் மூத்த புதல்வரிடத்தில் மூன்று தந்தை, சகோதர, சகோதரிகளின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளன.

இல்லறத்துணையின் பிரிவு தன்னையும் பிள்ளைகளையும் இந்த பூவுலகிலேயே இருந்து இல்லாதொழிக்க வேண்டும் என்ற மிகக் கடினமான முடிவை எடுக்க காரணமாக அமைந்ததா? வறுமையின் கோரம் தான் இத்தகைய முடிவொன்றை எடுப்பதற்கு தள்ளிவிட்டதா? 

மனிதக் கட்டப்பில் மழலைச் செல்வங்களை விரும்பும் சாதாரண தந்தைகளுக்கு மாறாக அவர்களின் உயிரை பறிக்குமளவிற்கு பிரியந்தவின் மனம் எவ்வாறு மாறியது எவ்வாறு? கணவனுடன் முரண்பட்ட மனைவிக்கு எவ்வாறு பெற்ற குழந்தைகளை விட்டுச்செல்ல ஒரு மாதத்திற்கு முன்னே தீர்மானமெடுக்க முடிந்தது? பெற்ற பிள்ளைகளும் உற்ற கணவரும்  பிரிந்த பின்னரும் எங்கு என்றே தெரியாத நிலையில் இருக்கும் அந்த மனைவி பகிரங்கமாக மௌனம் கலைப்பாரா? 

இத்தனை கேள்விகள். பதில்களை இனிவரும் நாட்களில் கம்புறுப்பிட்டிய பொலிஸ் பிரிவிடத்தில் எதிர்பார்த்து காத்திருந்தாலும், இவ்வாறானதொரு சம்பவம் இனி இந்த இலங்கை தீவில் நடக்காதவாறு சமூகத்தின் பிரதான அங்கங்களாக இருக்கும் குடும்பங்களின் கட்டமைப்பு விழுமியங்களை கடைப்பிடிக்க வேண்டியது காலத்தின் தேவையாகின்றது. 

( எம்.எப். எம். பஸீர் )