2020 இல் நான் பார்வையாளனே - உசைன் போல்ட் 

Published By: Priyatharshan

29 Jun, 2017 | 10:26 AM
image

2020 ஆம் ஆண்டு ஜப்­பானில் நடை­பெ­ற­வுள்ள ஒலிம்பிக் போட்­டியில் 100, 200 மீற்றர் ஓட்டப் பந்­த­யத்தை பார்­வை­யா­ளர்கள் பகு­தியில் அமர்ந்து பார்ப்பேன் என்று பிர­பல ஓட்­டப்­பந்­தய சம்­பியன்  வீரர் உசைன் போல்ட் தெரி­வித்­துள்ளார்.

உலகின் அதி­வேக ஓட்டப் பந்­தய வீர­ராக வலம்­வ­ரு­கிறார் உசைன் போல்ட். ஜமைக்­காவை சேர்ந்த அவர் 100, 200 மீற்றர் ஓட்­டப்­போட்­டியில் உலக சாத­னை­யா­ள­ராக இருக்­கிறார்.

100 மீற்றரை 9.58 விநா­டி­யிலும், 200 மீற்­றரை 19.19 விநா­டி­யிலும் கடந்து சாதனை படைத்­துள்ளார். ஒலிம்பிக் போட்­டியில் 8 தங்கப் பதக்கங்களை வென்று இருக்­கிறார்.

தற்­போது செக்.குடி­ய­ரசில் நடை­பெ­ற­வுள்ள உலக தட­கள போட்­டியில் பங்­கேற்க சென்­றுள்ள அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். 

அதன்போது உசைன் போல்ட் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில்,

நான் சிறந்த பெறு பே­று­களை பெற்­றி­ருக்­கிறேன். எனக்கு என்ன தேவையோ அவை அனைத்­தையும் செய்து விட்டேன். தற்­போது அது முடி­வுக்கு வந்­தி­ருக்­கி­றது என்று நினைக்­கிறேன். 

லண்­டனில் நடை­பெ­ற­வுள்ள உலக தட­கள சம்­பியன் போட்­டியில் பங்­கேற்க ஆர்­வ­மாக இருக்­கிறேன். அப்­போட்டி எனக்கு உணர்­வு­பூர்­வ­மாக இருக்கும்.

அடுத்த ஒலிம்பிக் போட்­டியில் 100, 200 மீற்றர் ஓட்­டப்­பந்­த­யத்தில் யார் வெற்றி பெறு­வார்கள் என்­பதை பார்­வை­யா­ள­னாக அமர்ந்து பார்ப்பேன். தற்­போது நிறைய இளம் வீரர்கள் வருகிறார்கள். இதில் யார் பட்டத்தை வெல்வார்கள் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35