இலங்கை உயர் டிஜிட்டல் புரட்சியின் மூலமாக  அனுகூலங்களை பெறுகிறது

Published By: Priyatharshan

28 Jun, 2017 | 01:24 PM
image

சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் முக்கிய பங்களிப்பை வழங்கும் துறை எனும் நிலையில், இலங்கையின் சகல துறைகளிலும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஊடுருவி வருகிறது.

தொலைத்தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்னான்டோ, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் வகிக்கும் முக்கிய பங்களிப்பை நன்று அறிந்து முக்கியத்துவமளித்துள்ளார். 

“அறிவார்ந்த சமூகம் மற்றும் நிலைபேறான பொருளாதாரத்தை நோக்கி இலங்கையை கொண்டு செல்லும் பிரதான உந்துசக்தியாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் அமைந்துள்ளது” என்றார்.

இலங்கை அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டிருந்த 2003ம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்ட இல. 27 இன் பிரகாரம் இலங்கை தகவல் மற்றும் தொழில்நுட்ப முகவர் அமைப்பு (ICTA) அரசின் பிரதான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமாக நிறுவப்பட்டிருந்தமையானது, நாட்டில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துறை அபிவிருத்தியில் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தது.

இந்நிறுவனத்தின் மேற்பார்வை செயற்பாடுகளைரூபவ் தொலைத்தொடர்பாடல் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சு மேற்பார்வை செய்வதுடன், அமைச்சரின் பணிப்புரையின் கீழ், துரித நிகழ்ச்சிகளை முன்னெடுத்திருந்தது.

“சர்வதேச ரீதியில் ஏற்படும் தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகள் போன்றவற்றுக்கு ஈடுகொடுக்கும் வகையில்ரூபவ் அதற்கேற்ற சூழலை ஏற்படுத்த ICTA இனால் பங்களிப்பு வழங்கப்படுகிறது” என அமைச்சர் ஹரின் தெரிவித்தார்.

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகியன மனித மற்றும் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கு அதிகளவு வாய்ப்பை கொண்டுள்ளன என குறிப்பிட்ட அமைச்சர், சூழலில் நீடித்திருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய தொழில்நுட்பங்களை அபிவிருத்தி செய்வது மற்றும் டிஜிட்டல் வேறுபாட்டை இணைப்பது போன்றவற்றின் முக்கியத்துவத்தையும் அமைச்சர் வலியுறுத்தியிருந்தார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், “தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தொழில்முயற்சியாண்மையில் புதிய சிந்தனைகள் மற்றும் புத்தாக்கங்களை நாம் ஊக்குவிக்க வேண்டும். அதனூடாக நிலைபேறான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திகளை எய்தக்கூடியதாக இருக்கும்” என்றார்.

உலகளாவிய ரீதியில் காணப்படும் தொழில்முயற்சியாண்மை சூழல் தொடர்பில் அமைச்சர் குறிப்பிடுகையில், “முழுமையாக ஒன்றிணைக்கப்பட்ட தொழில்முயற்சியாண்மை சூழல் கட்டமைப்புக்கான முன்நோக்கிய சிந்தனையுடனான செயற்பாட்டுத்திட்டங்களை எமது அரசாங்கம் கொண்டுள்ளது. எனவே, எமது நாடுக்கு பிராந்திய மட்டத்தில் போட்டியிடுவதற்கான சிறந்த வாய்ப்புகள் காணப்படுகின்றன” என்றார்.

குறிப்பாக, இலங்கையின் நாமம் Global Startup Ecosystem அறிக்கையில் உள்ளடங்கியிருந்தது. உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கை எந்த நிலையிலுள்ளது என்பதை அளவிட்டுக்கொள்ள பயனுள்ள ஒரு அளவுகோலாக இது அமைந்துள்ளது.

“ICTA இனால், இதை நோக்கி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், கடந்த சில ஆண்டுகளில் ஆரம்பநிலை நிறுவனங்கள் மற்றும் தொழில் முயற்சியாண்மை ஆகியவற்றில் பெருமளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது” என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

முகவர் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆரம்பநிலை நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சிறு, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை உதவி நிகழ்ச்சிகள் போன்றன துறைக்கு நேர்த்தியான பங்களிப்புகளை வழங்கியுள்ளன.

முகவர் நிறுவனத்தின் மூலமாக முன்னெடுக்கப்படும் Spiralation Seed நிதியிடல் நிகழ்ச்சியின் மூலமாக சிறப்பாக செயலாற்றக்கூடிய ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு அவசியமான நிதி உதவிகளை பெற்றுக்கொடுப்பதுடன், சுமார் 86 சதவீதமான நிறுவனங்களுக்கு தமது வியாபார செயற்பாடுகளை எவ்வித தடங்கல்களுமின்றி முன்னெடுக்கக்கூடியதாக அமைந்துள்ளது.

இலங்கையின் ஆரம்பநிலை நிறுவனங்கள் கொண்டிருக்கக்கூடிய கருத்தாக நிதி வழங்கல்கள் போதியளவின்மை என்பது பற்றி அமைச்சர் குறிப்பிடுகையில்,

“பெருமளவான ஆரம்பநிலை நிறுவனங்களின் திறனை கட்டியெழுப்ப முற்படும் போது நாம் அவதானிப்பவற்றில், குறித்த நிறுவனங்களிடம் சிறந்த சிந்தனைகள் காணப்பட்டாலும், அவற்றை நடைமுறைப்படுத்த போதியளவு நிதியின்மையை காண முடிகின்றது” என்றார்.

ஆரம்பநிலையிலுள்ள சகல செயற்பாட்டாளர்களுக்கும் தொடர்பாடல்களை பேணக்கூடிய சூழலை ICTA வருடாந்தம் ஏற்பாடு செய்வதுடன் அதில் ஆரம்பநிலை மாநாடு மற்றும் கண்காட்சி போன்றன அடங்கியுள்ளன.

தற்போது அதன் இரண்டாவது தொடர்ச்சியான ஆண்டில் ‘Disrupt Asia 2017’ முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இதில் முன்னணி சர்வதேச பேச்சாளர்கள்ரூபவ் ஆலோசனை வழங்குநர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் போன்றோர் உள்ளடங்கியிருப்பர். இவர்கள் புத்தாக்கமான ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு தொழில்முயற்சியாண்மை தொடர்பான வழிகாட்டல்களை வழங்குவார்கள்.

ICTA இன் பயிற்சிகள், வலையமைப்பு நிகழ்ச்சிகள் மற்றும் ஊக்குவிப்பு வாய்ப்புகள், ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கான உதவிகளினூடாக வெளிநாட்டு மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளில் பங்கேற்பதற்கான உதவிகள் போன்ற வழங்கப்படுகின்றன. இளம் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முயற்சியாளர்களை இந்த திட்டங்கள் ஊக்குவிப்பதுடன், ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கு தமது செயற்பாடுகளை ஊக்குவிக்கவும் வலிமைப்படுத்தவும் உதவியுள்ளன.

அமைச்சர் இறுதியாக குறிப்பிடுகையில், “இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப வியாபாரங்கள், குறிப்பாக ஆரம்பநிலை நிறுவனங்கள் எமது தேசத்தை மாற்றியமைத்து, எமது எல்லைகளுக்கு அப்பால் தமது செயற்பாடுகளை விஸ்தரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்த வண்ணமுள்ளன. இவர்களுக்கு உதவுவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் திகழ வேண்டும் என்பதுடன், அரசாங்கமும், தனியார் துறையும் இணைந்து அவர்களுக்கு சர்வதேச மட்டத்துக்கு செல்வதற்கு உதவிகளை வழங்க வேண்டும்” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

Yamaha மோட்டார் சைக்கிள்கள், ஸ்கூட்டர்களுக்காக பிரத்தியேகமாக...

2024-03-28 10:39:07
news-image

Samsung Sri Lanka ஆனது 35%...

2024-03-27 10:43:06
news-image

பருக்களுக்கு விடைகொடுத்திடும் : பியுரிஃபைங் நீம்...

2024-03-27 10:19:07
news-image

கார்கில்ஸ் நிறுவனமானது பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான...

2024-03-27 10:17:41
news-image

SampathCards உடன் இணைந்து  0% வட்டி...

2024-03-20 02:18:01
news-image

பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகங்கள் மத்தியில் மாற்றத்தை...

2024-03-20 02:13:22
news-image

2023ம் ஆண்டின் நாலாம் காலாண்டில் குறிப்பிடத்தக்க...

2024-03-20 02:05:24
news-image

Francophonie 2024 – மார்க் அய்மன்...

2024-03-18 15:26:06
news-image

சியபத பினான்ஸ் பிஎல்சீ, பதுளை ஸ்ரீ...

2024-03-18 14:49:36
news-image

9 ஆவது வருடமாக கொழும்பு பங்குசந்தை...

2024-03-14 21:40:35
news-image

கொரியன் எயார்லைன்ஸுடன் கைகோர்க்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

2024-03-14 21:46:34
news-image

சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடிய மக்கள்...

2024-03-12 11:20:57