விழிப்புலனற்றோருக்கான ஆசிய கிண்ண ரி- 20 : சம்பியனாகும் நம்பிக்கையுடன் களமிறங்கும் இலங்கை அணி

Published By: Priyatharshan

18 Jan, 2016 | 10:43 AM
image

இந்­தி­யாவின் கேரளா மாநி­லத்தில் கொச்சின் விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெறவுள்ள விழிப்­பு­ல­னற்­றோ­ருக்­கான முத­லா­வது ஆசிய கிண்ண இரு­பது 20 கிரிக்கட் போட்­டியில் சம்­பி­ய­னாக முடியும் என்ற நம்­பிக்­கை­யுடன் இலங்கை விழிப்­பு­ல­னற்றோர் அணி­யினர்  இங்­கி­ருந்து புறப்­பட்டுச் சென்­றனர்.

பங்­க­ளாதேஷ், இந்­தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடு­களின் விழிப்­பு­ல­னற்றோர் அணிகள் பங்­கு­பற்றும் முத­லா­வது விழிப்­பு­ல­னற்றோர் ஆசிய கிண்ண இரு­பது 20 கிரிக்கட் போட்­டிகள் நாளை­முதல் 24ஆம் திக­தி­வரை நடை­பெ­ற­வுள்­ளன.

தென் ஆபி­ரிக்­காவில் 2012இல் நடை­பெற்ற விழிப்­பு­ல­னற்­றோ­ருக்­கான 40 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கட் போட்டி, இந்­தி­யாவில் 2014இல் நடை­பெற்ற விழிப்­பு­ல­னற்­றோ­ருக்­கான இரு­பது 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டி ஆகி­ய­வற்றில் இலங்கை விழிப்­பு­ல­னற்றோர் அணி­யினர் மூன்றாம் இடங்­களைப் பெற்­றி­ருந்­தனர்.

இம்­முறை முதல் தட­வை­யாக நடை­பெ­ற­வுள்ள விழிப்­பு­ல­னற்­றோ­ருக்­கான ஆசிய கிண்ண இரு­பது 20 கிரிக்கட் போட்­டியில் ‘சிங்­கங்கள்’ என்­பதை நிரூ­பிக்க இலங்கை விழிப்­பு­ல­னற்றோர் அணி­யினர் முயற்­சிக்­க­வேண்டும் என விழிப்­பு­ல­னற்றோர் அணி­யி­னரை வழி­ய­னுப்­பி­வைக்கும் நிகழ்­வின்­போது விழிப்­பு­ல­னற்­றோ­ருக்­கான இலங்கை கிரிக்கட் சங்கத் தலைவர் நோபர்ட் சில்வா தெரி­வித்தார்.

இந் நிகழ்வு கொம்­பனித் தெருவில் அமைந்­துள்ள விழிப்­பு­ல­னற்றோர் சங்க தலை­மை­ய­கத்தில் சனிக்­கி­ழமை காலை நடை­பெற்­றது.

இப் போட்­டி­களில் இந்­தி­யா­வையும் பாகிஸ்­தா­னையும் வெற்­றி­கொள்ள முடியும் என்ற மன உறு­தி­யுடன் வீரர்கள் விளை­யாட வேண்டும் எனவும் இந்­திய அணி­யி­னரின் போட்டி வியூ­கங்­களை அறிந்­து­கொண்டு அதற்­கேற்ற வியூ­கங்­களை அமைத்து விளை­யாடி வெற்­றி­பெ­ற­வேண்டும் எனவும் அவர் கூறினார்.

‘‘விழிப்­பு­ல­னற்­றோ­ருக்­கான இவ் விளை­யாட்டை முன்­னேற்­று­வ­தற்கு நிரு­வா­கி­களால் ஒரு­போதும் முடி­யாது. வீரர்­க­ளி­னால்தான் முடியும். அவர்­களின் ஆற்றல் வெளிப்­பா­டு­க­ளி­லேயே முன்­னேற்றம் தங்­கி­யி­ருக்­கின்­றது. எனவே இப் போட்­டி­களில் திற­மையை வெளிப்­ப­டுத்தி வெற்­றி­வாகை சூடி ஆசிய கிண்­ணத்­துடன் வீரர்கள் தாயகம் திரும்­ப­வேண்டும்’’ என நோபர்ட் சில்வா தெரி­வித்தார்.

இலங்கை விழிப்­பு­ல­னற்றோர் அணிக்கு ரீகஸ் லங்கா நிறு­வ­னத்­தினர் சீருடை வழங்கி உத­வி­யுள்­ளனர். இந்த சீரு­டை­களை ரீகஸ் லங்கா நிறு­வனப் பணிப்­பாளர் நிர்மல் டி சில்வா அண்­மையில் வழங்­கி­வைத்தார். நற்­குண அமைப்பின் ஸ்தாபர்­களில் ஒரு­வ­ரான குஷில் குண­சே­க­ரவும் நிதி உதவி வழங்­கி­யுள்ளார்.

அத்­துடன் விளை­யாட்­டுத்­துறை அமைச்சும் விழிப்­பு­ல­னற்­றோ­ருக்கு தேவை­யான சகல உத­வி­க­ளையும் ஒத்­து­ழைப்­பு­க­ளையும் வழங்கி வரு­வ­துடன் போக்­கு­வ­ரத்து செல­வ­னங்கள் அனைத்­தையும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. இத­னை­யிட்டு விளைாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­க­ர­வுக்கு விழிப்­பு­ல­னற்­றோ­ருக்­கான இலங்கை கிரிக்கட் சங்கத் தலைவர் நோபர்ட் சில்வா நன்­றி­களைத் தெரி­வித்தார்.

சுக­தே­கிகள் விளை­யா­டி­வரும் கிரிக்கட் இலங்­கையில் பிர­பல்யம் பெற்­றுள்­ள­போ­திலும் விழிப்­பு­ல­னற்­றோரின் கிரிக்கட் பற்றி பெரும்­பா­லா­ன­வர்கள் அறி­யா­தி­ருப்­பது வேத­னைக்­கு­ரி­ய­தாகும். முயற்­சியே இல்­லாமல் வெறு­மனே சோம்­பே­றி­க­ளாகத் திறியும் பல சுக­தே­கிகள் மத்­தியில் தங்­களால் எதையும் சாதிக்க முடியும் என்ற துணிச்­ச­லுடன் விளை­யாட்­டுத்­துறை உட்­பட பல்­வேறு விட­யங்­களில் ஈடு­பட்­டு­வரும் மாற்­றுத்­தி­ற­னா­ளிகள் ஊக்­கு­விக்­கப்­ப­டு­வது மிகவும் அவ­சி­ய­மாகும்.

விழிப்­பு­ல­னற்ற இலங்கை கிரிக்கட் வீரர்கள் உலக விழிப்­பு­ல­னற்றோர் கிரிக்கட் போட்­டி­களில் இரண்டு தட­வைகள் மூன்றாம் இடத்தைப் பெற்று தங்­க­ளது ஆற்­றல்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

தங்­க­ளுக்­கென்று தனி­யான புல்­தரை ஆடு­களம் இல்­லா­ததும் நிரந்­தர அனு­ச­ர­ணை­யாளர் இல்­லா­ததும் பெருங்­கு­றை­யாக இருந்­து­வ­ரு­கின்­றது என நோபர்ட் சில்வா சுட்­டிக்­காட்­டினார். இந்த வச­திகள் யாவும் செய்­து­கொ­டுக்­கப்­பட்டால் விழிப்­பு­ல­னற்றோர் இதை­விட சிறந்த பெறு­பே­று­க­ளுடன் இலங்­கைக்கு புக­ழீட்­டிக்­கொ­டுப்பர் என்றார் அவர்.

விழிப்­பு­ல­னற்றோர் குழாம்

சந்­தன தேஷப்­பி­ரி­யவை அணித் தலை­வ­ராகக் கொண்ட இலங்கை விழிப்­பு­ல­னற்றோர் கிரிக்கட் குழாமில் இரண்டு புது­மு­கங்கள் இணைத்­துக்­கொள்­ளப்­பட்­டள்­ளனர். ஏனை­ய­வர்கள் கடந்த சில வரு­டங்­க­ளாக இலங்கை விழிப்­பு­ல­னற்றோர் அணியில் தொடர்ந்து விளை­யாடி வரும் அனு­ப­வ­சா­லிகள்.

விழிப்­பு­ல­னற்றோர் அணி­யினர் களம் இறங்­கும்­போது அவ்­வ­ணியில் அறுவர் முழு அளவில் பார்­வை­யற்­ற­வர்­க­ளாக இருக்க வேண்டும். மற்­றை­ய­வர்கள் குறை­பார்வை உடை­ய­வர்­க­ளாக இருக்­க­வேண்டும் என்­பது விழிப்­பு­ல­னற்றோர் கிரிக்கட் விதி­க­ளாகும். இவர்­க­ளுக்­கென்று மணி ஓசை எழுப்பும் பந்து போட்­டி­க­ளின்­போது பயன்படுத்தப்படுகின்றது.

குழாமில் இடம்பெறும் வீரர்கள் வருமாறு:

சந்தன தேஷப்பிரிய (அணித் தலைவர்), டி. ரவீந்த்ர (உதவி அணித் தலைவர்), சமன் குமார, டி. சமிந்த, சமிந்த புஷ்பகுமார, கோசல ஹேரத், கே. டி. ஆர். ஜயரத்ன, உப்புல் சஞ்சீவ, ருவன் வசன்த, கெலும் லக்மால், நுவன்த சுதெஷ், சந்தன குமார சூரியஆராச்சி, தினேஷ் மத்துகம, கல்யாண குமார, சுரங்க சம்பத், ருவன் கருணாதிலக்க, திமுத்து பெரேரா. பயிற்­றுநர்: வை. ஜீ. சும­ன­வீர, முகா­மை­யாளர்: லக் ஷான் தேவப்­ரிய, மத்­தி­யஸ்தர்: ரவி பெரேரா. - –டோனி விக்டர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை டெஸ்ட் குழாத்தில் மூத்த அனுபவசாலிகள்...

2024-03-19 01:55:29
news-image

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பங்களாதேஷ்...

2024-03-19 01:29:59
news-image

மீண்டும் டைம் அவுட் ஆட்டமிழப்பை கேளி...

2024-03-18 20:09:27
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் வீண்போனது...

2024-03-18 21:52:34
news-image

இலங்கையுடனான 3 ஆவது ஒருநாள் போட்டியில்...

2024-03-18 17:21:32
news-image

ஜனித் லியனகேயின் கன்னிச் சதம் இலங்கைக்கு...

2024-03-18 13:47:17
news-image

ஒருநாள் தொடரைக் கைப்பற்றும் குறிக்கோளுடன் களம்...

2024-03-18 03:08:33
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்-2024: றோயல்...

2024-03-18 03:13:19
news-image

மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட்டில் புதிய...

2024-03-17 13:29:44
news-image

றோயலை 30 ஓட்டங்களால் வென்று மஸ்டாங்ஸ்...

2024-03-17 06:28:44
news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட திரித்துவம் -...

2024-03-16 21:29:46
news-image

நுவரெலியா நகர்வல ஓட்டத்தில் தலவாக்கொல்லை வக்சன்...

2024-03-16 20:08:07