பேஸ்புக் சமூகவலைதளத்தில் 200 கோடி பேர் இணைந்துள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் சூக்கர்பேர்க் அறிவித்துள்ளார்.

இது குறித்து மார்க் சூக்கர்பேர்க் அவரது பேஸ்புக் பக்கத்தில், உலகை இணைப்பதில் நாங்கள் முன்னேற்றமடைந்து வருகிறோம் என பதிவேற்றியுள்ளார்.

பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 17 சதவிகிதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.