இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் அடிக்­கடி உபா­தை­க­ளுக்குள்­ளா­கின்­ற­மையை குறைப்­ப­தற்கு இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனம் புதிய செயற்­றிட்டம் ஒன்­றை முன்­னெ­டுத்­துள்­ளது.

அதன்­படி ஒவ்­வொரு வீரருக்கும் அவர்­களின் கால் பாத அள­வு­களின் படி பிரத்­தி­யே­க­மான பாத­ணி­களை தயா­ரித்து வழங்க ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

இந்த செ­யற்­றிட்­டத்தை குதிக்கால் காயங்­க­ளுக்­கான விசேட வைத்­திய நிபுண­ரான அவுஸ்­தி­ரே­லி­யாவின் வைத்­தியர் நிக்கலஸ் முன்­னெ­டுக்­கின்றார்.

கடந்த ஒரு மாத­த்­திற்கு முன்னர் இலங்கை வந்­தி­ருந்த அவர், குறிப்­ பிட்ட சில வீரர்­க­ளுக்­கான பிரத்­தி­யேக பாதணி­களை உரு­வாக்­கி­யுள்ளார்.

அதை சரி­பார்ப்­ப­தற்­காக தற்­போது இலங்கை வந்­துள்ள நிக்கலஸ் நேற்­று­ முன்­தினம் ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­தித்தார்.

அப்­போது கருத்து தெரி­வித்த நிக்­கலஸ், கிரிக்கெட் வீரர்கள் மட்­டு­மல்ல, அனைத்து விளை­யாட்டு வீரர்­க­ளுக்கும் பாதணி என்பது மிக முக்கியமான ஒன்று. அவர்களின் வேகம் மற்றும் உத்வேகத்தை அதிகரிப்பதற்கு பாத­ணி­களால் முடியும்.

அந்த வகையில் இலங்கைக் கிரிக்கெட் வீரர்­க­ளுக்கு முதல் கட்­ட­மாக பிரத்­தி­யேக பாதணி வடி­வ­மைப்பில் நாம் ஈடு­பட்­டுள்ளோம். 

இலங்கை வீரர்­களின் பாதங்கள் பெரும்­பாலும் தட்­டை­யா­ன­வை­யாக காணப்­ப­டு­கின்­றன. அவர்­களின் பாதங்­களின் தன்­மைக்­கேற்ப பாத­ணி­களை தயார்­ப­டுத்­து­வதே எமது செயற்­றிட்டம் என்று அவர் குறிப்பிட்டார்.