இன்றைய அவசரமான உலகத்தில் பெண்களின் மாதவிடாய் காலங்களில் அவர்களுக்கு பேருதவியாக இருப்பது நாப்கின்கள் தான். அதிலும் தற்போது சந்தையில் கிடைத்து வரும் நாப்கின்களால் சொல்லமுடியாத தொல்லைகளை பெண்கள் சந்தித்து வருகிறார்கள். இருந்தாலும் இதற்கு மாற்று இல்லை என்பதால் இதனைத் தொடர்கிறார்கள். 

இந்நிலையில் திருச்சியை சேர்ந்த வள்ளி என்ற பெண்மணி மூலிகையால் ஆன நாப்கினை தயாரித்து பெண்களுக்கு நிம்மதியை அளித்து வருகிறார். 

இக்காலத்திய பெண்களில் கர்ப்பபை பிரச்சினை தொடர்பாக ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் பிரச்சினையை நீக்கும் வகையில் ஒரு சித்த வைத்தியர் ஒருவரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் வேப்ப இலை, சோற்று கற்றாழை மற்றும் துளசி ஆகியவற்றைப் பயன்படுத்தி இயற்கையான முறையில் நாப்கின் தயாரிக்கிறார் இந்த பெண்மணி. இந்த நாப்கினை பயன்படுத்திய கல்லூரிப் பெண்கள் உள்ளிட்ட பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருவதால் இந்த மூலிகை நாப்கின் தற்போது பிரபலமாகி வருகிறது.

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்