தபால் ஊழியர்கள் இன்றும் பணிநிறுத்த போராட்டத்தில்

Published By: Robert

28 Jun, 2017 | 08:55 AM
image

பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தபால்துறை ஊழியர்கள் இன்றும் பணிநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். 

நுவ­ரெ­லியா, கண்டி, காலி, கோட்டை தபால் நிலைய கட்­டி­டங்­க­ளையும் அதன் காணி­யி­னையும் இந்­தி­யா­வுக்கு வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்து வரு­கி­றது. எனவே அத்­திட்­டத்தை உட­ன­டி­யாக கைவிட வேண்டும். அத்­துடன் தபால் சேவை ஊழி­யர்கள் நீண்ட காலம்  எதிர்­கொள்ளும் நிர்­வாக ரீதி­யி­லான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு முன்­வைக்­கப்­பட வேண்டும் உள்­ளிட்ட கோரிக்­கை­களை முன்­வைத்தே பணி பகிஷ்­க­ரிப்பில் இறங்­க­வுள்­ள­தாக ஒன்­றி­ணைந்த தபால் சேவை தொழிற்­சங்க முன்­ன­ணியின் இணை அமைப்­பாளர் எச்.கே. காரி­ய­வசம் தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், இலங்­கை­யி­லுள்ள தபால் திணைக்­களம் மிகவும் ப.ைழ­மை­வாய்ந்த திணைக்­க­ள­மாகும். எனினும், அர­சாங்கம் தபால்­து­றை­யையும் தபால் சேவை­யா­ளர்கள் மீதும் உரிய கவனம் செலுத்தி நட­வ­டிக்கை எடுப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. சரித்­திர முக்­கி­யத்­து­வம்­வாய்ந்த நுவ­ரெ­லியா, கண்டி, காலி கோட்டை தபால் நிலைய கட்­டி­டங்­க­ளையும் காணி­யி­னையும் இந்­தி­யா­வுக்கு விற்­பனை செய்­வதற்கு நட­வ­டிக்கை எடுத்து வரு­கி­றது. ஆகவே, அர­சாங்கம் அத்­திட்­டத்தை கைவிட்டு நாட்­டி­லுள்ள தபா­ல­கங்­களைப் பாது­காக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தபால் துறை ஊழி­யர்கள் நீண்ட கால­மாக நிர்­வாக ரீதி­யி­லான பிரச்­சி­னை­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர். எனினும், அதற்கு இது­வ­ரையில் எவ்­விதத் தீர்வும் முன்­வைக்­க­வில்லை. 

கடந்த ஆட்­சியின் போதும் இது தொடர்­பி­லான கோரிக்கை முன்­வைத்தோம். நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்த பின்­னரும் இது தொடர்பில் பல முறை பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளோம். 

அதன்­போது குறித்த பிரச்­சி­னை­க­ளுக்கு விரைவில் தீர்வு முன்­வைப்­ப­தாக வக்­கு­று­தி­ய­ளிக்­கப்­பட்­டது. ஆயினும் இது­வ­ரையில் தீர்வு முன்­வைக்­கப்­ப­ட­வில்லை என அவர் மேலும் தெரி­வித்தார்.

நாட்டின் பிரதான 3400 க்கும் அதிகமான அஞ்சலகங்களில் இந்த பணிநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02