தென்னிலங்கையின் அனர்த்தம் காரணமாக மக்களுக்கு மின்சாரத்தை வழங்க 33 பில்லியன் ரூபாய்கள் மேலதிகமாக செலவழிக்கப்பட்டுள்ளது. நிலைமைகள் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை என மின்சக்தி  மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி  அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார். 

2020 ஆம் ஆண்டில் 890  மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்து  நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதாகவும அவர் குறிப்பிட்டார். 

மின்சக்தி  மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.