கொழும்பில் இடம்பெற்றுவரும் எதிர்ப்புப் பேரணி காரணமாக லோட்டஸ்ட் வீதியின் செரமிக் சந்தியில் இருந்து என்.எஸ்.ஏ சுற்றுவட்டம் வரையான பகுதியில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவத்துள்ளனர்.

இதனால் கொழும்பின் பல பகுதிகளில் கடும் வாகன நெரிசல் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ள குறித்த வீதிகளை பயன்படுத்துவதை வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் இயலுமானவரை தவிர்க்குமாறு போக்குவரத்துப் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.