இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கவிற்கு அதிரடி விசாரணையொன்றை முன்னெடுப்பது குறித்து இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று குழு அதிகாரிகள் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த விதிமுறைகளை மீறியதாக குற்றங்சாட்டப்பட்டுள்ள மலிங்கவை விசாரணை செய்வது குறித்து இன்று இரவு மேற்கொள்ளவுள்ள கலந்துரையாடலில் தீர்மாணம் எடுக்கப்படவுள்ளது.

சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் பின்னர் இரு தடவைகள் லசித் மலிங்க ஒப்பந்த விதிமுறைகளை மீறியுள்ளதாகவும், ஊடகங்களுக்கு அதிகாரிகளின் அனுமதியில்லாமல் கருத்து தெரிவித்தமை போன்ற குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் கிரிக்கெட் சபையின் அதிகாரிகள் மட்ட அவரச கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.