இலங்­கை அணியின் புதிய பயிற்­சி­யா­ள­ர் நியமனம் தொடர்பில் மூன்று பேரிடம் பேச்­சு­வார்த்தை நடத்தப்பட்டு வரு­வ­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. 

அதன்­படி பங்­க­ளாதேஷ் பயிற்­சி­யா­ள­ரான இலங்கை அணியின் முன்னாள் வீரர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­க­வி­டமும், நியூ­ஸி­லாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டீபன் பிள­மிங்­கு­டனும், அவுஸ்­தி­ரே­லிய வீரர் டொம் மூடி­யுடனும் பேச்­சு­வார்த்தை நடை­பெ­று­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் இம்­மாத இறு­தியில் சிம்­பாப்வே அணி­யு­ட­னான 5 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொட­ரிலும் ஒரே­யொரு டெஸ்ட் போட்­டி­யிலும் இலங்கை அணி விளை­யா­டு­கி­றது. இந்தத் தொட­ருக்­காக இடைக்­கால பயிற்­சி­யாளராக தற்­போ­தைய இலங்கை அணியின் களத்­த­டுப்பு பயிற்­சி­யா­ள­ரான நிக் போத்தஸ் நிய­மிக்­கப்­ப­டலாம் என்றும், அதே­வேளை ஒருநாள் தொட­ருக்­கான துடுப்­பாட்ட பயிற்­சி­யாள­ராக முன்னாள் வீரர் அவிஷ்க குண­வர்­தன மற்றும் டெஸ்ட் போட்­டிக்­கான துடுப்­பாட்ட பயிற்சியாளராக ஹஷான் திலகரத்ன ஆகியோர் நியமிக் கப்பட வாய்ப்பிருப் பதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

இதேவேளை, இலங்கைக் கிரிக்கெட் அணியின் பயிற்­சி­யா­ள­ராக செயற்­பட்டு வந்த கிரஹம் போர்ட் தன் பத­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்­த­தை­ய­டுத்து, புதிய பயிற்­சி­யா­ள­ராக முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜய­வர்­தன நிய­மிக்­கப்­ப­டலாம் என செய்­திகள் வெளி­யா­கின. 

இந்தத் தக­வலை மறுத்­துள்ள மஹேல தான் மும்பை இந்­தியன்ஸ் அணிக்கு பயிற்­சி­ய­ளிப்­ப­தி­லேயே தற்­போது கவனம் செலுத்­து­வ­தாக தெரி­வித்­துள்ளமை குறிப்பிடத்தக்கது.