அஸ்­கி­ரிய பீடத்தை பகைத்­துக்­கொண்டு தேசத்­து­ரோக ஆட்­சியை முன்­னெ­டுத்துச் செல்ல முடி­யாது என அர­சாங்கம் உணர்ந்­து ­கொண்­டுள்­ளது. 

எனவே தற்­போது அஸ்­கி­ரிய பீடத்­திற்கு பதி­லடி கொடுப்­ப­தற்­கான செயற்­பா­டு­களை அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­வ­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில தெரி­வித்தார். 

தூய்­மை­யான ஹெல உறு­மய அமைப்பின் அலு­வ­ல­கத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்,

அவர் மேலும் தெரி­விக்­கையில், பெளத்த மதத்­திற்­கான முக்­கி­யத்­து­வத்­தினை குறைக்­கின்ற வகையில் புதிய அர­சி­யல­மைப்பு சூட்­ச­ும­மான முறையில் தயா­ரிக்­கப்­ப­டு­வதை அறிந்த பெளத்த பீடங்­களில் அஸ்­கி­ரிய பீடம் முத­லா­வ­தாக எதிர்ப்பை வெளி­யிட்­டது.

நாட்டில் இன­வாதம் தலை­யெ­டுப்­ப­தாக காட்­டிக்­கொண்டு இஸ்­லா­மிய இன­வா­தத்தை மேலீட்ட சில அமைச்­சர்கள் முயற்­சித்த போதே கண்டி அஸ்­கி­ரிய பீடம் இவ்­வாறு எதிர்­ப்பினை வெளி­யிட்­டது.

அதனால் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் தேசத்­து­ரோக செயற்­பா­டு­க­ளுக்கு அஸ்­கி­ரிய பீடம் இட­ம­ளிக்­காது என்­பதை அர­சாங்கம் அறிந்­து­கொண்­டுள்­ளது. அதேபோல் அஸ்­கி­ரிய பீடத்­தி­னரை மெள­னிக்க வைத்தால் மாத்­தி­ரமே தற்­போ­தைய பய­ணத்தை தொடர முடியும் என்றும் அர­சாங்கம் அறிந்­து ­கொண்­டுள்­ளது.

 அதனால்தான் தற்­போது தம்­புள்ளை ரங்­கிரி விஹா­ரையை அர­சு­ட­மை­யாக்­கிக்­கொண்டு அதனால் அஸ்­கி­ரிய பீடத்­திற்கு பதி­லடி கொடுக்க அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. அதற்­கா­கவே விஹா­ரை­களில் உள்ள உண்­டி­யல்­க­ளையும் கூட சூறை­யாட முயற்­சிக்­கின்­றார்கள்.

அமைச்சர் அகிலவிராஜ் காரி­ய­வ­சத்­திற்கு ஒரு எச்­ச­ரிக்கை விடுக்­கின்றேன். விஹா­ரை­களில் உள்ள சொத்­துக்­களை சூறையா­டினால் அவர்கள் அடுத்த பிற­வியில் நாய்­க­ளா­கவும், காகங்­க­ளா­க­வுமே பிறப்­பார்கள் என்று வர­லாறு கூறு­கின்­றது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் மாமா­வான ஜே.ஆர்.ஜய­வர்­தன அன்று கெடம்பே விஹா­ரைக்கு தூபி அமைத்­துக்­கொ­டுத்து சொந்­த­மா­க்கிக்­கொண்டார். ஆனாலும் அவர் அதற்­காக அமைச்­ச­ரவை பத்­தி­ரத்தை சமர்­ப்பிக்­க­வில்லை. இன்று அமைச்­சரவை பத்­திரம் சமர்­ப்பித்து விஹா­ரைகள் அர­சு­ட­மை­யாக்­கப்­ப­டு­கின்­றன.

எனவே மாமாக்கள் செய்யாத செயற்பாட்டைத்தான் இன்று அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் செய்ய முற்படுகின்றார். எமது நாட்டை முழுமையாக சுரண்டிச் சென்ற கொள்ளையர்கள் கூட விஹாரைகளின் உண்டியல்களில் கை வைக்கவில்லை என்பதை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.