பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2 ஆவது இருபதுக்கு - 20 போட்டியில் நியூ­ஸி­லாந்து அணி 10 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூ­ஸி­லாந்தில் சுற்­றுப்­ப­யணம் செய்து விளை­யாடி வரு­கி­றது. இரு அணி­க­ளுக்கு இடை­யி­லான முதல் இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்டி கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஆக்­லாந்தில் நடை­பெற்­றது. இதில் பாகிஸ்தான் 16 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் வெற்றி பெற்­றது.

இந்­நி­லையில் மூன்று போட்­டிகள் கொண்ட தொடரின் 2ஆ-வது போட்டி நேற்று ஹாமில்­டனில் நடை­பெற்­றது. இதில் வெற்றி பெற்றால் தொடரை வென்று விடலாம் என்ற நிலையில் பாகிஸ்தான் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டி­யது. அதன்­படி பாகிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கள் இழப்­பிற்கு 168 ஓட்­டங்­களைக் குவித்­தது.

169 ஓட்­டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்­குடன் நியூ­ஸி­லாந்து அணியின் குப்தில், வில்­லி­யம்சன் தொடக்க வீரர்­க­ளாக களம் இறங்­கி­னார்கள். இரு­வரும் பாகிஸ்தான் பந்து வீச்சை துவம்சம் செய்­தனர். இதனால் நியூஸி. 17.4 ஓவர்­களில் விக்கெட் இழப்­பின்றி 171 ஓட்­டங்­களைப் பெற்று 10 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் அபார வெற்றி பெற்­றது.

இப் போட்டியில் குப்தில் 87 ஓட்­டங்­க­ளையும், வில்­லி­யம்ஸன் 72 ஓட்­டங்களையும் குவித்­தனர்.

இரு அணிகளுக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு - 20 தொடரில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றிபெற்று 1-1 என சமநிலையில் உள்ளன.