விலைமதிக்க முடியாத தங்கம் மற்றும் வைரம் கலந்த ஆபரணங்களுடன் சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான  நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபர் தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து விலைமதிக்க முடியாத தங்கம் மற்றும் வைரம் கலந்த ஆபரணங்களை சட்டவிரோதமாக கடத்திவர முற்பட்டவேளை  இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஹொரணை, பண்டாரகமயைச்  சேர்ந்த நபரென ஆரம்பகட்ட விசாரணைகளில் இருநு்து தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் இதற்கு முன்னரும்  சட்டவிரோதமாக இவ்வாறான பொருட்களை இலங்கைக்கு கடத்திவந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறித்த ஆபரணங்களின் நிறை மற்றும் விலை என்பனவற்றை சரியாக தெரிவிக்க முடியாதென தெரிவிக்கும் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.