பம்பலப்பிட்டி, வஜிரா வீதியில் அதி நவீன மெர்சீடிஸ் பென்ஸ் கார் ஒன்றை செலுத்திய சிறுவன் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில் தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளதுடன் எவருக்கும் பாதிப்பேற்படவில்லையென  பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

15 வயதுடைய சிறுவன் ஒருவனே குறித்த காரை சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி செலுத்திச்சென்று விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.விபத்தில் சிறுவன் தெய்வாதீனமாக உயிர் தப்பியதுடன் கார் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், காரை செலுத்திய சிறுவன் உடனடியாக கைதுசெய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டார்.

எனினும் விபத்து குறித்து சிறுவனின் பெற்றோரிடம் அறிவிக்கப்பட்ட பின்னர் குறித்த சிறுவன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தும்புள்ள சந்தியில் இருந்து அதிக வேகமாக வந்த இந்த கார் வஜிரா வீதியில் வைத்து வலதுபுறமாக திரும்பியுள்ளதுடன் வீதியில் இருந்த மின் விளக்கு கம்பம் ஒன்றையும் சேதப்படுத்திய நிலையில் கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

கார் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.