நாட்டின் குப்பை பிரச்­சி­னை­களை தீர்க்க புத்­தளம் சீமெந்து தொழிற்­சாலை அமைந்­துள்ள பகு­தி­களை பயன்­ப­டுத்த புதிய திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.   குப்பை பிரச்­சி­னை­களை தீர்க்க இதுவே சிறந்த வழி­முறை என்று அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். 

இந்த முயற்­சி­களை எவரும் தடுக்க முனைந்தால் அவர்­களே குப்பை பிரச்­சி­னைக்கு பொறுப்பு கூற­வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார். பாரிய நகர மற்றும் மேல் மாகாண நகர அபி­வி­ருத்தி அமைச்சில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

 அவர் மேலும் கூறு­கையில், 

நாட்டில் பாறைகள் அகழ்­வுகள் மேற்­கொண்ட பகு­தி­களில் குப்­பை­களை கொட்ட நட­வ­டிக்கை எடுக்க முடி­யுமா என  சிலர் கேள்வி எழுப்­பி­யுள்­ள­துடன் சூழல் பாதிக்­காத வகையில் குப்­பை­களை அகற்றும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் எனவும்  தெரி­விக்­கின்­றனர். 

 நாம் அதற்­கான முயற்­சி­களை மேற்­கொண்டோம். ஆனால் அவ்­வா­றன செயற்­பா­டுகள் அனைத்­தையும் நாம் முன்­னெ­டுக்க முன்னர் எமக்கு எதி­ராக பாரிய எதிர்ப்­புகள் எழுந்­தன. றை அவ்­வா­றான பாறைகள்  அகற்றும் பிர­தே­சங்கள் உள்­ளன. ஆனால் எதிலும் குப்­பை­களை கொட்­டு­வ­தற்கு  மக்கள் இட­ம­ளிக்க வில்லை. மக்­களை தூண்­டி­விட்டு ஒரு­சிலர் இந்த நட­வ­டிக்­கை­களை நிறுத்­தி­விட்­டனர். 

அதேபோல் புத்­த­ளத்தில் சீமெந்து உற்­பத்தி சாலை அமைந்­துள்ள பகு­தியில்   குப்­பை­களை கொட்­டவும் யோச­னை­களை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. 2007 ஆம் ஆண்டு இந்த முயற்­சி­களை  நாம் எடுத்தோம்.  ஆனால் அப்­போது பயங்­க­ர­வாத சிக்கல் இருந்­தது. அதன் பின்னர் இது கைவிடப் பட்­டது. 

இப்­போதும் புத்­தத்தில் சீமெந்து உற்­பத்தி சாலைக்­காக  பாறைகள் உடைக்­கப்­பட்ட இடங்­களில் பாரிய குழிகள் உள்­ளன அவற்றை நாம் பயன்­ப­டுத்த முடியும்.   ஒரு வரு­டத்தில் 14 லட்சம்  டொன் கற்கள் அகற்­றப்­ப­டு­கின்­றன. இதில் பாரிய இடம் உள்­ளது. ஒரு வரு­டத்தில் ஒரு மில்­லியன் கிலோ குப்­பைகள் சேக­ரிக்­கப்­ப­டு­கின்­றன. ஆகவே இந்த குழி­களை பயன்­ப­டுத்த முடியும். குழி­களில் குப்­பை­களை கொட்டி காடு­களை வளர்க்க முடியும்.  மக்­களை இந்த பகு­தி­களில் குடி­ய­மர்த்த முடி­யாது. இதுவே சிறந்த தீர்­வாகும். இதற்கு உலக வங்­கியின் நிதி உத­வி­களும் எமக்­காக ஒதுக்­கப்­பட்­டுள்­ளன. கடந்த ஆட்­சியில் இந்த முயற்­சிகள் எடுக்­கப்­பட்ட போதிலும் அவை  முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இதனை இந்த அர­சாங்கம்  முன்­னெ­டுக்க முயற்­சிக்­கின்­றது. எனினும் சூழல் பாது­காப்பு அறிக்கை வரும்  வரையில் நாம்  காத்­தி­ருந்தோம்.   இப்­போது நாம் இதனை  முன்­னெ­டுக்க முடியும். 

நாம் முயற்­சி­களை கைவி­ட­வில்லை.   சூழ­லியல் அதி­கா­ரி­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னே­டுத்து வரு­கின்றோம். அதற்­கான சகல முன்­னெ­டுப்­பு­களும் முடி­வ­டைந்­துள்­ளன. அடுத்த மாதம் அறிக்கை கிடைத்­த­வுடன் நாம் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க முடியும். குப்­பை­களை சர்­வ­தேச நாடு­க­ளுக்கு அனுப்பி தீர்வு காண முடி­யாது. இங்­கேயே  தீர்வு காண­வேண்டும். செப்­டெம்பர் மாதம் வேலைத்­திட்­டங்கள் ஆரம்­பிக்­கப்­படும். நாட்டில் குப்­பை­க­ளினால்  ஏற்­பட்­டுள்ள நிலை­மை­களை மேலும் விரி­வ­டைய அனு­ம­திக்கக் கூடாது. தீர்­வு­கா­ன­வேண்டும் . இதனை யாரும் குழப்­பக்­கூ­டாது. இது  கொரியா நாட்டின் இயந்­திர மற்றும் தொழி­நுட்ப உத­வி­யுடன் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. 

நாம் யாரு­டனும் முரண்­பா­டு­களை  ஏற்­ப­டுத்த முயற்­சிக்­க­வில்லை. இவற்றை குழப்ப யாரும் முயற்­சித்தால் அவர்கள் தான் இந்த பிரச்­சி­னைக்கு பொறுப்­பாகும். நாம் புத்­தளம் பகு­தியை ஒரு தேசிய வளம் மிக்க வல­ய­மாக மாற்­றவே முயற்­சிக்­கின்றோம். இதனை  வெறு­மனே குப்­பை­களை மாத்­திரம் கொட்டும் பகு­தி­யாக கரு­த­தாது தேசிய சொத்­தாக கருத்துகின்றோம். இதில் குப்பை மீள் சுழற்சி முறைமைகளை  உருவாக்கவுள்ளோம். யாரும் இதை குழப்ப நினைத்தால் கைவிடவும் தயாராக உள்ளோம். இது எமது கடமை அல்ல.  நாம் ஒரு உதவியாக இதை மேற்கொள்ளவுளோம். குழப்பங்களை மேற்கொண்டு இவற்றை தடுத்து நாட்டில் சூழலியல் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடாது. இது மிகச்சரியான திட்டமாகும்  என்றார்.