தந்தையொருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பரிதாப சம்பவமொன்று நேற்றிரவு மாத்தறையில் இடம்பெற்றுள்ளது.

மாத்தறை – கம்புறுப்பிட்டிய – பெரலிஹதுர பகுதியிலேயே குறித்த பரிதாபகரமாக சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

44 வயதான தந்தை, அவரது 10 மற்றும் 16 வயதுடைய மகள்மாரையும் 14 வயதுடைய மகனையும் தூக்கிலிட்ட பின் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதேவேளை, தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்வதற்கு முன்னர் வீட்டுக்கு தீவைத்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரிவயந்துள்ளது.

 இந்நிலையில், மனைவி கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னரே வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும், குடும்பத் தகராறொன்றின் காணரமாகவே இத் துர்ப்பாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும்பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.