முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான வட்ஸ் எப் நாளுக்கு நாள் தனது பயனாளிகளுக்கு புதுப்புது வசதிகளை செய்து கொண்டிருக்கும் நிலையில் அதன் பயனாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பல மில்லியன்  வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் வட்ஸ் எப்பின்  ஊடாக இதுவரை சில வகையான கோப்புக்களை (வீடியோ, படங்கள், PDF, SpreadSheet, Word Document) மட்டுமே பகிரக்கூடியதாக இருந்தது.ஆனால் இந்த வரையறை தற்போது நீக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்காலத்தில் எந்தவொரு கோப்பு வகையினையும் பகிர்ந்துகொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.எனினும் iOS சாதனங்களில் 128 MB ஆகவும், Android சாதனங்களில் 100 MB கோப்பின் கொள்ளளவு வரையறுக்கப்பட்டுள்ளது.