கன­டாவில் முதன்­மு­றை­யாக சூதாட்ட நிலை­யத்­திற்கு சென்ற தமிழ் பெண்­ணொ­ரு­வ­ருக்கு பெரிய தொகை பணம் கிடைத்­துள்­ள­தாக அந்­நாட்டு ஊட கம் ஒன்று தகவல் வெளி­யிட்­டுள்­ளது.

பிறந்த நாளை கொண்­டாட திட்­ட­மிட்ட பெண் ஒருவர் கன­டாவின் மொன்றியல் சூதாட்ட நிலை­யத்­திற்கு சென்று சூதாட்­டத்தில் ஈடு­பட்­டுள்ளார்.

அந்த பெண் முதல் முறை­யாக சூதாட்ட நிலை­யத்­திற்கு சென்று முதல் பரிசை வென்று அனை­வ­ரையும் ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­தி­யுள்ளார்.

35 ஆவது பிறந்த நாளை கொண்­டா­டிய பால­கௌரி குண­சீலன் என்ற தமிழ் பெண்ணே  பெருந்தொகையான பணப்பரிசு தொகையை பிறந்த நாள் பரி­சாக வென்­றுள்ளார்.

வாழ்நாள் முழு­வதும் ஒவ்­வொரு வாரமும் 1,000 டொலர் அல்­லது 675,000 டொல­ராக மொத்த தொகையை பெற்றுக் கொள்­வதா என்­பதை பால­கௌ­ரியே தீர்­மா­னிக்­க வேண்டுமென்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கணக்­கிட்டு பார்த்தால் 1000 டொலர் என்ற ரீதியில் 13 வரு­டங்­க­ளுக்கு அந்த பணம் செலுத்த நேரிடும். இதனால் ஒரே தட­வையில் 675,000 டொலர் பணம் பால­கௌ­ரிக்கு செலுத்தப்பட்டுள்ளதாக கனேடிய ஊடக மொன்று செய்தி வெளியிட்டுள்ளது.