வவுனியா செட்டிகுளம் பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவரை 17வயதுடைய இளைஞர் அழைத்து வந்து தன்னுடன் வைத்திருந்த நிலையில் இருவரையும் செட்டிகுளம் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்தனர்.

வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தின் தமிழ் மொழி சேவைப்பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்வே குறித்த இருவரையும் செட்டிகுளம் பொலிசாருடன் இணைந்து கைதுசெய்துள்ளதாக வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா செட்டிகுளம் பகுதியில் அனுராதபுரம் எப்பாவல பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவரை 17 வயதுடைய மதவாச்சி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னுடன்  அழைத்து வந்து வைத்திருந்துள்ளார். 

இதையடுத்து வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அலுவலகத்தின் தமிழ் மொழி பொலிஸ் சேவைப்பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து வன்னி பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகம் செட்டிகுளம் பொலிசாருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போது நேற்று மாலை குறித்த இருவரையும் கைது செய்தனர்.

இதையடுத்து செட்டிகுளம் பொலிசார் எப்பாவல பொலிஸ் நிலையத்திற்கு தகவலை வழங்கியுள்ளனர். 

இந்நிலையில், எப்பாவல பொலிஸ் நிலையத்தில் குறித்த சிறுமியின் உறவினர்கள் இரண்டு தினங்களுக்கு முன் குறித்த சிறுமியைக் காணவில்லை என முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர். 

இதையடுத்து செட்டிகுளம் பகுதியில் கைதுசெய்யப்பட்ட இருவரையும் எப்பாவல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அலுவலகம் தெரிவித்துள்ளது. 

மேலதிக விசாரணைகளை எப்பாவல பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.