என்னை இன்று குற்றம் கூறும் நபர்கள் அன்று எனது அமைச்­ச­ர­வையில் இருந்­த­வர்கள்.  என்னால் ஏதேனும் குற்றம் இடம்­பெற்று இருப்பின் அதற்கு அவர்­களும் பொறுப்புக் கூற வேண்டும் எனத் தெரி­வித்த முன் னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ அன்று என்­னுடன் இருக்கும் வரையில் என்னை அரசன் என கூறி­ய­வர்கள் இன்று என்னை குற்­ற­வாளி என கூறு­கின்ற நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. குற்­றங்­க­ளுக்கு நான் மட்­டுமே பொறுப்­பாளி அல்ல. என்­னுடன் இருந்த அனை­வரும் குற்­ற­வா­ளிகள் என்­பதை ஏற்­று­கொள்ள வேண்டும் எனவும் வலி­யு­றுத்­தினார்.

குரு­நாகல் பிர­தே­சத்தில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், 

நாட்டில் இன்று அதி­க­மாக தாக்­கப்­ப­டு­வதும்,  தண்­டிக்­கப்­ப­டு­வதும் இந்த நாட்டின் தேரர்­களும், இரா­ணுவ வீரர்­க­ளு­மே­யாவர். இரா­ணு­வத்­தி­னைரை குற்­ற­வா­ளிகள் என்ற ரீதியில் பார்ப்­ப­துடன் அதி­க­மாக தண்­டிக்­கப்­பட்டும் வரு­கின்­றனர். 

மறு­புறம் நாட்டில் தேரர்கள் இன­வாதம் பரப்­பு­வ­தாக கூறி  தண்­டிக்­கப்­பட்டு  வரு­கின்­றனர். அதேபோல் மிகவும் சூட்­சு­ம­மாக நாட்டில் இன­வா­தமும் மத­வா­தமும் பரப்­ப­பட்டு வரு­கின்­றது. பெளத்த சிங்­கள மக்­க­ளுக்கும் மதத்­திற்கும் எதி­ராக பல்­வேறு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

 இன­வா­தமும் பரப்­ப­பட்டு வரு­கின்­றது. இந்த செயற்­பா­டுகள் கார­ண­மாக நாம் வெற்­றி­கொண்ட நாடு மீண்டும் பறி­போகும் நிலைமை ஏற்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. 

அதேபோல் பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் தாக்­கப்­பட்டு வரு­கின்­றனர். அரச அதி­கா­ரிகள், வைத்­திய அதி­கா­ரிகள் வேலை நிறுத்­தங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்கு மிகவும் மோச­மாக தாக்­குதல் நடத்­திய வர­லாறு இதற்கு முன்னர் எப்­போதும் இருந்­த­தில்லை. 

இந்த அர­சாங்­கமே மிகவும் கொடூ­ர­மான வகையில் மாண­வர்கள் மீது தாக்­குதல் நடத்தி வரு­கின்­றது. அப்­பா­வி­க­ளுக்கு இவ்­வாறு மோச­மான வகையில் தாக்­குதல் நடத்­தப்­ப­டு­கின்­றது. இதற்கு கட்­டளை பிறப்­பித்­தது யார்? யாரு­டைய அதி­கா­ரத்தில் இந்த சம்­ப­வங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன? 

அன்று எமது ஆட்­சியில் இவ்­வாறு நடந்தால் அல்­லது நடை­பெற்­ற­குற்­றங்கள் அனைத்­திற்கும் மஹிந்த ராஜபக் ஷவே காரணம் என எனது பெயரை குறிப்­பிட்­டனர். இன்று யாரை குற்றம் சுமத்­து­வது. 

 நிறை­வேற்று அதி­காரம் இன்­று­அ­னை­வரின் மூலமும் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றதா? என்ற கேள்வி எழுந்­துள்­ளது. 

 ரணில் -மைத்­திரி கூட்­ட­ணி­யினால் நாட்டை சரி­யான பாதையில் கொண்­டு­செல்ல முடி­யாது என்­பது அப்­போதே எமக்கு தெரியும். இந்த இரு­வரின் கூட்­டணி திரு­மணம் பொருத்­த­மற்­றது. இவர்­களால் நாட்டை கொண்­டு­செல்ல முடி­யாது என ஆரம்­பத்தில் இருந்தே தெரி­வித்தேன். அர­சாங்கம் செய்யும் தவ­று­களை ஊட­கங்கள் தெரி­விக்க முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஊடக அடக்­கு­முறை மிகவும் மோச­மாக இடம்­பெற்று வரு­கின்­றது. 

நாட்டின் நிலை­மையை மக்கள் இன்று நன்­றாக உணர்ந்­துள்­ளனர். ஒரு தடவை விழுந்த குழியில் மீண்டும் ஒரு­முறை விழ மக்கள் தயார் இல்லை. ஆகவே மாற்றம் ஒன்றை இன்று மக்கள் விரும்பும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. அர­சாங்கம் உண்­மை­களை மறைத்து ஊட­கங்­களை அடக்கி ஆட்­சியை கொண்­டு­செல்ல முயற்­சிக்­கின்­றது. 

எனினும் மக்கள் போரா­ட­வேண்டும். நாம் மக்­க­ளுடன் எப்­போதும் கைகோர்த்து போராட தயா­ராக உள்ளோம். இன்று எம்­முடன் மக்கள் அனை­வரும் கைகோர்த்து செயற்­ப­டு­கின்­றனர். எமது கூட்­டத்தை கண்டால் அஞ்சும் நபர்­களும் உள்­ளனர். இந்த அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து இரண்டு ஆண்­டு­களில் என்னை குற்­ற­வாளி என பொய்­யான கருத்­துக்­களை கூறி என்னை அவ­ம­தித்து வரு­கின்­றது.  என்னை இன்று குற்றம் கூறும் நபர்கள் அன்று எனது அமைச்­ச­ர­வையில் இருந்­த­வர்கள். 

என்னால் ஏதேனும் குற்றம் இடம்­பெற்று இருப்பின் அதற்கு அவர்­களும் பொறுப்புக் கூற வேண்டும்.  அன்று என்­னுடன் இருக்கும் வரையில் என்னை அரசன் என கூறி­ய­வர்கள் இன்று என்னை குற்­ற­வாளி என கூறு­கின்ற நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. குற்­றங்­க­ளுக்கு நான் மட்­டுமே பொறுப்­பாளி அல்ல. என்­னுடன் இருந்த அனை­வரும் குற்­ற­வா­ளிகள் என்பதை ஏற்றுகொள்ள வேண்டும். 

எனது ஆட்சியில் இந்த நாட்டை காட்டிகொடுக்கும் எந்தவொரு நடவடிக்கையும் நான் முன்னெடுக்கவில்லை. இனியம் அவ்வாறன செயற்பாடுகளை நான் முன்னெடுக்க போவதும் இல்லை அன்று எம்முடன் இருந்தவர்கள் சிலர் சலுகைகளுக்காக எமை விட்டு சென்றுள்ளனர். யார் எம்மை விட்டு சென்றாலும் மக்கள் என்று எம்முடன் இருக்கின்றனர்  என அவர் குறிப்பிட்டார்.