நோன்புப் பெருநாள் எமது மக்­க­ளி­டையே சமா­தானம், ஒற்­றுமை மற்றும் சகோ­த­ரத்­து­வத்­தை மேலும் வலு­வாக்­கு­வ­தாக அமைய வேண்டும் என்று எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் விடுத்­துள்ள நோன்புப் பெரு நாள் வாழ்த்துச் செய்­தியில் தெரி­வித்­துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

இலங்கை வாழ் அனைத்து இஸ்­லா­மிய மக்­க­ளுக்கும் எனது இத­யங்­க­னிந்த ரமழான் பெருநாள் வாழ்த்­துக்கள். புனித ரமழான் மாதத்தின் நிறை­வை நினை­வு­கூரும் முக­மாக இந்­த­ நாளை நாம் கொண்­டா­டு­கின்­ற­போது, இப்­பண்­டி­கையின் பாரம்­ப­ரி­யத்தை போற்­றும்­வ­கையில், சகோ­த­ரத்­துவ உணர்­வோடு நாம் பகிர்ந்து கொள்ளும் அதே­வேளை இல்­லா­த­வர்கள் மேல்­காட்டும் கரி­ச­னை­யையும் எமது சிந்­தையில் கொள்­வோ­மாக.

இந்த பெரு­நாளை கொண்­டாடும் இத்­த­ரு­ணத்தில், எமது தேசத்தின் நல்­லு­ற­விற்­கான அர்ப்­ப­ணிப்பை மீண்டும் வலி­யு­றுத்­து­வ­துடன், நாட்டின் ஒற்­று­மையை உல­கிற்கு எடுத்­துக்­காட்­டவும் செயற்­ப­டு­வோ­மாக. 

இந்த ரமழான் பண்­டி­கை­யா­னது, எமது மக்­க­ளி­டையே சமாதானம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை மேலும் வலு வாக்குவதாக அமைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.