இலங்கை உட்­பட உல­கவாழ் அனைத்துச் சகோ­தர முஸ்­லிம்­க­ளுக்கும் சமா­தானம், நல்­லி­ணக்கம் மிகுந்த மகிழ்ச்­சி­யான நோன்புப் பெரு­நா­ளாக இன்­றைய தினம் அமை­யட்டும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வாழ்த்துத் தெரி­வித்­துள்ளார்.

நோன்புப் பெரு­நாளை முன்­னிட்டு பிர­தமர் விடுத்­துள்ள வாழ்த்துச் செய்­தியில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

உலகம்  முழு­வ­து­முள்ள சகோ­தர முஸ்­லிம் கள் சகோ­த­ரத்­துவம், சமத்­துவம், சக­வாழ்வு ஆகிய உய­ரிய நோக்­கங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு நோன்புப் பெரு­நாளை வெகு விமரி­சை­யாகக் கொண்­டா­டு­கின்­றனர்.  

இஸ்லாம் மார்க்­கத்தின் ஐம்­பெரும் கட­மை­களில் நோன்பு மிகவும் முக்­கிய இடத்தைப் பெற்­றுள்­ளது. ஒரு மாதம் முழு­வதும் உண­வின்றி  நோன்பு நோற்று ரம­ழானைக் கழிக்கும் முஸ்­லிம்கள் தமது சகோ­தர மக்­களின் துன்ப துயர­ங்கள், தேவை­களை உணர்­வு­பூர்­வ­மாக அணுகி, உத­விகள் வழங்­கப்­பட வேண்­டிய மக்­க­ளுக்கு தியாக உணர்­வுடன் உத­வி­ய­ளித்து சகோ­த­ரத்­துவம், சக­வாழ்­வைக் கட்­டி­யெ­ழுப்ப ரமழான் மாதத்தில் விசேட செயற்­பா­டு­களில்  ஈடு­ப­டு­கின்­றனர்.  

அவ்­வாறே  இந்த நோன்பு காலத்தில் தனிப்­பட்ட ரீதி­யிலும்,  சமூக ரீதி­யா­கவும் வளர்த்துக் கொள்ளும் உடல், உள  அமை­தித்­தன்மை, கட்­டுப்­பாடு, ஒழுக்கம் என்­ப­வற்றை மிகவும் சிறந்த சமூ­க­மொன்றைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்குப் பயன்­ப­டுத்திக் கொள்­வது முஸ்­லிம்­களின் எதிர்­பார்ப்­பாகும்.  அந்த எதிர்­பார்ப்பை யதார்த்­த­மாக மாற்றிக் கொள்­வ­தற்கு இந்த நோன்பு காலத்தில் உடல் மற்றும் உள ரீதி­யாக நாம் வளர்த்துக் கொள்ளும் பெறு­மா­னங்­களை  வாழ்வின் அனைத்து சந்­தர்ப்­பங்களிலும் பேணிக்­கொள்ள வேண்டும்.  

இலங்கை மற்றும் உலக வாழ் அனைத்து சகோதர முஸ்லிம்களுக்கும் சமாதானம்,  நல்லிணக்கம் மிகுந்த மகிழ்ச்சியான நோன்புப் பெருநாளாக அமையட்டும் என உளப்பூர்வமாக வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.