நல்­லாட்சி அர­சாங்­கத்தில் உச்­சக்­கட்ட ஜன­நா­யக சுதந்­திரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. எனவே தற்­போ­தைய அர­சாங்கம் எதிர்­வரும் 15 வரு­டங்­க­ளுக்கு மேலாக நீடிக்கும் என வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கருணா­நா­யக்க தெரி­வித்தார். 

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் எம்மால் செலுத்த முடியாத அளவு கடன் பெற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் நாம் கடன்களை செலுத்திக்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்துகின்ற வகையிலான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். வாக்குகளால் வரமுடியாத சில அரசியல் வாதிகள் இன்று ஆர்ப்பாட் டங்களை தூண்டி வருகின்றனர். இதனால் காந்தியைப் போல தற்காலத்திலும் அகிம் ஷையை கடைப்பிடிக்க முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மை­ய­க­மாக சிறி­கொ­தவில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­துக்­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தற்­போது எமது நாட்­டிற்கு ஜீ.எஸ்.பீ. வரிச்­ச­லுகை கிடைத்­துள்­ளது. அத­னை­ய­டுத்து முத­லீட்­டா­ளர்­களின் வரு­கை­யிலும் அதி­க­ரிப்பு ஏற்­பட்­டுள்­ளது. குறிப்­பாக பங்­க­ளாதேஷ் உள்­ளிட்ட நாடு­க­ளி­லி­ருந்து பல முத­லீட்­டா­ளர்கள் வரு­கின்­றார்கள்.

ஏற்­று­மதி செய­வற்­கான வாய்ப்­புக்கள் பல கிட்­ட­டி­யுள்­ளன. அதேபால் இலங்கை வெளி­நா­டு­க­ளுடன் நாம் தொடர்பு கொள்­கின்ற போது எமது நாட்டின் மனித உரி­மைகள் செயற்­பா­டுகள் தொடர்பில் பேச வேண்­டி­யி­ருந்­தது. அதனை அமைச்சர் மங்­கள சம­ர­வீர சரி­யாக செய்­துள்ளார்.

அதற்கு அடுத்­த­ப­டி­யாக இரா­ஜந்­திர வணிக முறை­யி­னூ­ட­கவே இலங்­கையை உலக நாடு­க­ளுடன் இணைக்க முடியும். தற்­போது அதற்­கான சந்­தர்ப்பம் கிடைத்­துள்­ளது. எனவே எமது வணிக செயற்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்கு வெளி­நாட்­டி­லுள்ள இலங்கை தூத­ரங்­களை வலுப்­ப­டுத்­து­கின்றோம்.

தற்­போது 64 இலங்கை துத­ரங்கள் வெளி­நா­டு­களில் இயங்­கு­கின்­றன.  அவற்றில் சில­வற்றை மூட தீர்­மா­னித்­துள்ளோம். அதேபோல் மற்றும் சில இடங்­களை மேலும் வலுப்­ப­டுத்­துவோம்.  அதனால் 70 வீதம் செலவும் குறையும்.

அதனால் வலுப்­ப­டுத்­தப்­படும் தூத­ர­கங்­களின் வாயி­லாக நாட்­டிற்குள் முத­லீ­டு­களை உள்­ளீர்ப்­ப­தற்­கான முன்­னெ­டுப்­புக்­களை மேற்­கொள்வோம். 

விசேட பிர­மு­கர்கள் என்ற பேரில் அநா­வ­சி­ய­மான சிலரும் வெளி­வி­வ­கார அமைச்சில் செயற்பாடுகளை முன்­னெ­டுத்­துள்­ளனர். வரு­கின்ற நாட்­களில்  விசேட பிர­மு­கர்கள் என்ற நாமத்தை வைத்­துக்­கொண்டு செயற்­படும் அநா­வ­சி­ய­மா­ன­வர்­க­ளுக்கு அந்த அந்­தஸ்த்து பறிக்­கப்­படும்.

மத்­திய கிழக்கு நாடு­ள­களில் தோன்­றி­யுள்ள அசா­தா­ரண நிலை­மையின் கார­ண­மாக  அங்கு பணி புரியும் இலங்­கை­ய­ருக்கு எந்த வித பாதிப்பும் இல்லை  என்­பதை தற்­போது உறு­தி­யாக கூற முடியும். அது தொடர்பில் அந்­நாட்­டி­லுள்ள வெளி­வா­கார அமைச்­சர்­க­ளி­டத்தில் பேசி இலங்­கை­யர்­க­ளுக்கு உரிய பாது­காப்பு வழங்க வேண்டும் என்றும் கோரி­யுள்ளோம்.

மத்­திய கிழக்கு நாடு­களில் இவ்­வா­றான நிலைமை தோன்­று­வது சக­ஜம் இருப்­பினும் அர­சாங்கம் இலங்­கை­யரை பாது­காப்­பதில் கவ­ன­மாக இருப்­ப­தோடு மத்­திய கிழக்கு நாடு­க­ளு­ட­னான உற­வு­க­ளையும் நாம் வலு­வாக பேணுவோம்.

கடந்த அர­சாங்­கத்தின் காலத்தில் எம்மால் செலுத்த முடி­யாத அளவு கடன் பெற்­றுக்­கொள்­ளப்­பட்து. ஆனால் நாம் கடன்­க­ளையும் செலுத்­திக்­கொண்டு நாட்டின் பொரு­ளா­தா­ரத்­தையும் மேம்­ப­டுத்­து­கின்ற வகை­யி­லான திட்­டங்­க­ளையே தற்­போது முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.

அதற்­காவே இன்று உலக நாடு­க­ளுடன் கைகோர்த்­துக்­கொண்டு பய­ணிக்­கின்றோம்.  அதனால் தற்­போது உள்­நாட்டு அபி­வி­ருத்தி 12 இலி­ருந்து 16 வீத­மாக அதி­க­ரித்­துள்­ளது. இவை புதிய வரி­களால் மாத்­திரம் வர­வில்லை கடந்த காலங்­களை சட்­ட­வி­ரோ­த­மாக நாட்­டிற்கு வெளியில் பணம் சென்றது. தற்போது அந்த நிலையை மாற்றியமைத்துள்ளோம். எதிர்­கா­லத்தில் வரியும் குறைக்­கப்­படும்.

தற்­போது முக்­கிய வரிகள் நடை­மு­றைக்கு வரு­வ­தில்லை என்று குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக மாளிகை வரி ஆகி­யவை இன்றும் நடை­மு­றைக்கு வராமல் இருப்­பதற் காரணம் என்­ன­வென்­பதே பிரச்­சி­னை­யாக உள்­ளது. இருப்­பினும் மேற்­படி வரி­க­ளுக்­கான ஆவ­ணங்­களை தயா­ரிக்கும் பணி­கள் 100 வீதம் முழு­மை­யாக்­கப்­பட்டு சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் சட்­டமா அதிபர் திணைக்­களம் தற்­போது வரையில் அது தொடர்பி்ல் அர­சாங்­கத்­திற்கு பதில் வழங்­கா­ம­லேயே இருக்­கின்­றது.

வெளி­நா­டு­களில் சென்று தூது­வர்கள் என்ற பெயரில் வினோத செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­வர்­களை மீண்டும் நாட்­டுக்கு அழைக்­க­வுள்ளோம். அவ்­வாறு மூன்று நாடு­க­ளுக்கு தூவர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­வர்­களை மீள அழைக்­க­வுள்ளோம். இவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட பணி­களை உரிய வித்தில் செய்­யா­மையே இவர்கள் மீள அழைக்­கப்­பட கார­ண­மாகும். தற்­போ­தைய அர­சாங்கம் முத­லீட்­ட­ளார்­க­ளி­டத்­தி­லி­ருந்து நாட்­டினுள் வரும் முத­லீட்­டா­ளர்­களின் தொகையில் அதி­க­ரிப்பை செய்து தரு­மாறு தான் கோரிக்கை விடுக்­கின்­றது.

 எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 4 ஆம் திகதி வெளி­நா­டு­களில் இருக்­கின்ற இலங்கை தூது­வர்­களை சக­ல­ரையும் அழைப்­பித்து அர­சாங்கம் அவர்­க­ளுக்கு அறி­வுரை வழங்­க­வுள்­ளது. ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் இவர்­களை சந்­திப்­பார்கள்.  பய­னில்­லாத தூத­ரங்­க­ளையும் மூடு­வ­தற்கு தற்­போது அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. 

அர­சாங்­கம்­தொ­டர்ந்­தும்­நி­லைக்­குமா?

அர­சாங்­கத்தை நடத்திச் செல்­வதில் தற்­போது எந்த பிரச்­சி­னையும் இல்லை. அர­சாங்கம் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தினால் அர­சாங்­கத்­திற்கு எந்த பிரச்­சி­னையும் இல்லை. அவ்­வா­றி­ருந்தும் ஆர்ப்­பாட்டம் செய்­கின்­ற­வர்­க­ளுக்கும் இன்று சுதந்­திரம் உள்­ளது.

எவ்­வா­றா­யினும் இன்று பல்கலைகழக நிர்வாகங்களும் கூடஆர்ப்பாட்டங்களை நிறுத்த வேண்டும் என்றே கூறுகின்றன. இந்த ஆர்ப்பாட்டங்களினால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி போகின்றது. வாக்குகளால் வர முடியாத சில அரசியல் வாதிகளின்  இன்று இவ்வாறான தூண்டல்களை செய்கின்றார்கள். அதனால் காந்தியை போல தற்காலத்திலும் அகிம்சையை கடைபிபடிக்க முடியாது.

எனவே அரசாங்கம்  என்றும் சட்டத்திற்கு முறணான செயற்பாடுகளை அனுமதிக்காது. அதனால் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற அதேவேலை மறுபுறத்தில் ஜனாநாய சுதந்திரத்தையும் அதிகமாக வழங்கியுள்ள அரசாங்கம் ஆட்சியில் இன்னும் 15 வருடங்களுக்கு மேலாக நீடிக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என்றார்.