அடுத்­த­வர்­க­ளது கஷ்­டங்­களைப் புரிந்­து­கொள்­வ­து டன் தமக்­குத்தாம் நேர்­மை ­யாக இருப்­ப­தனால் மனி தம் வளம்­பெறும் என்­பதை ரமழான் நோன்பு எமக்கு நினை­வு­ப­டுத்­து­கின்­றது. ஈதுல்­பிதர் நோன் புப் பெரு­நாளைக் கொண்­டாடும் முஸ்லிம் மக்­க­ளுக்கு வாழ்த்­துக்­களைத் தெரி­விக்­கின்றேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நோன்புப் பெரு­நாளை முன்­னிட்டு விடுத்­துள்ள வாழ்த்துச் செய்­தியில் தெரி­வித்­துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,   

பௌதீக வளங்கள் மீது அளவு கடந்த பேரா­சையைக் கொண்­டுள்ள நவீன மனிதன் திருப்­தி­யற்ற பய­ணத்­தையே மேற்­கொண்­டுள்ளான். மக்கள் மத்­தியில் பிள­வு­களைத் தோற்­று­வித்து, அமை­தி­யின்­மையை ஏற்­ப­டுத்தி, நம்­பிக்­கை­யீ­னத்தை பரப்­பவே அழிவை உண்­டாக்கும் இந்த இருப்பு கார­ண­மாக உள்­ளது.  

உல­கெங்­கிலும் வாழும் முஸ்லிம் மக்கள் மிகுந்த பக்­தி­யுடன் அனுஷ்­டிக்கும் ரமழான் மாதத்தில் கடை­பி­டித்­து­வரும் பரஸ்­பர கௌரவம், சமத்­துவம், ஈகை மற்றும் ஏழை­க­ளுக்கு உத­வுதல் போன்ற பண்­புகள் மனி­த­னது விடு­தலை சுய­ந­லத்­தி­லன்றி பிறர் நலம் பேணு­வ­தி­லேயே தங்­கி­யுள்­ளது என்­ப­தையே வெளிப்­ப­டுத்­து­கின்­றன.

அந்த வகையில் ஈதுல் பித்ர் நோன்புப் பெரு­நாளின் மூலம் முழு மனித சமூ­கத்­திற்கும் விடுக்­கப்­படும் முக்­கிய செய்தி பிர­பஞ்ச சமத்­துவம் என்­ப­தாகும். சமய, ஆன்­மீக மற்றும் சமூக பெறு­மா­னங்­களின் அடிப்­ப­டையில் எல்­லா­வற்­றிலும் சமத்­து­வத்தைப் பேணு­வதே அதன் மூலம் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. மேலும் அடுத்­த­வர்­க­ளது கஷ்­டங்­களைப் புரிந்­து­கொள்­வ­துடன், தமக்குத் தாம் நேர்­மை­யாக இருப்­ப­தனால் மனிதம் வளம்­பெறும் என்­பதை ரமழான் நோன்பு எமக்கு நினை­வு­ப­டுத்­து­கி­றது.  

சமய எல்­லை­களைக் கடந்து பொது மானி­டத்தை இலக்­காகக் கொண்ட இத்தகைய வளமான தொலைநோக்குடைய ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் இலங்கை மற்றும் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம் மக்களுக்கு எமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.