சட்டவிரோதமான முறையில் மீன்பிடித்துறையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்களை  கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

கடற்படையினரால் இவர்கள் இருவேறு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.

இவர்களில் 8 பேர், தடை செய்யப்பட்ட வலைகள் மற்றும்  2 டோலர் இயந்திரங்களுடன், நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து, நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோன்று சட்டவிரோதமான, மீன்பிடியில் ஈடுபட்ட, 6 இந்திய மீனவர்கள், நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தலைமன்னாருக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் படகுகள் மற்றும் மீன்கள் என்பன யாழ். கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.