ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி என்ற ரீதியில் எமது அர­சியல் செயற்­பா­டுகள் அனைத்­திற்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ ஆத­ரவு வழங்­குவார் என மஹிந்த ஆத­ரவு எம்­.பி.­யான தினேஷ் குண­வர்­தன நம்­பிக்கை தெரி­வித்­துள்ளார்.

தேசிய அர­சாங்­கத்தின் 2016 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்­டத்­திற்கு மஹிந்த ராஜ­பக்ஷ எதிர்ப்­பினை தெரி­வித்து வாக்­கெ­டுப்பில் கலந்து கொள்­ளா­மையே எமது புதிய கட்சி ஒன்றை ஸ்தாபிப்­ப­தற்­கான அடி­த்தளம் எனவும் சுட்­டிக்­காட்­டினார்.

தேசிய அர­சாங்­கத்­தினால் ஸ்தாபிக்­கப்­ப­ட­வுள்ள புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு தனது பூரண ஆத­ர­வினை வழங்­கு­வ­தாக மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­தி­ருந்தார். இது தொடர்பில் சிங்­கள ஊடகம் ஒன்று கேள்வி எழுப்­பி­யி­ருந்த நிலை­யி­லேயே பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான தினேஷ் குண­வர்­தன மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் அர­சாங்­கத்­திற்கு எதி­ரான எமது செயற்­பா­டுகள் பாரா­ளு­மன்­றத்­திற்கு உள்­ளேயும் வெளி­யேயும் தொடரும். அந்­த­வ­கையில் பொது எதி­ர­ணியில் சிலர் தேசிய அர­சாங்­கத்­துடன் இணை­ய­வுள்­ள­தாக போலி­யான பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

பொது எதி­ர­ணியின் செயற்­பா­டுகள் தொடர்பில் இந்த அர­சாங்கம் பெரும் அளவு அச்­சப்­ப­டு­கின்­றது.

பொது எதி­ர­ணியின் அனைத்­து­வி­த­மான செயற்­பா­டு­க­ளுக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ ஆத­ரவு வழங்­குவார். இது தொடர்பில் எவ்­வித சந்­தே­கமும் கிடை­யாது.

அந்­த­வ­கையில் ஐக்­கிய தேசி­யக் ­கட்­சி­யினால் முன்­னெ­டுக்­கப்­படும் சில செயற்­பா­டுகள் எமது தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக அமைந்­துள்­ளது. இது தொடர்பில் நாம் மக்­களை தெளி­வு­ப­டுத்­துவோம்.

மறு­புறம் புதிய அர­சியல் அமைப்பிலும் எமது சமூ­கத்தை பாதிக்கும் வகையில் பல்­வேறு விட­யங்கள் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்­ளது. அந்­த­வ­கையில் இவற்றில் மாற்­றங்­களை கொண்­டு­வ­ரா­விடின் தொடர்ந்தும் இதற்கு எதிர்ப்­பினை தெரி­விப்போம்.

இவற்றில் மாற்­றங்­களை கொண்­டு­வ­ரா­விடின் புதிய அர­சியல் கட்­சி­யொன்றை உரு­வாக்­கு­வது தவிர்க்க முடியாது. கடந்த காலங்களில் தேசிய அரசாங்கத்தின் 2016 ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்திற்கு மஹிந்த ராஜபக் ஷ எதிர்ப்பினை தெரிவித்து வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமையே எமது புதிய கட்சி ஒன்றை ஸ்தாபிப்பதற்கான அடித்தளம் என்றார்.