காணாமல் போனோர் பணி­ய­கத்தை உரு­வாக்கும் சட்டம் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்­டி­ருப்­பதை பிரித்­தா­னியா மற்றும் அமெ­ரிக்கா உள்­ளிட்ட உலக நாடுகள் வர­வேற்­றுள்­ளன. ஏக­ம­ன­தாக பாரா­ளு­மன்றில் நிறை­வேற்­றப்­பட்ட காணாமல் போனோர் அலு­வ­லகம் குறித்த சட்­டத்தை பாரா­ளு­மன்றில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க  சமர்ப்­பித்­தி­ருந்தார்.

காணாமல் போனோர் பற்­றிய உண்மைகளைக் கண்­ட­றி­வது  மற்றும் தேவை ப்பட்டால் காணாமல் போனோ­ருக்­கான சான்­றி­தழ்­களை வழங்­கு­வது உள்­ளிட்ட  பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் சட்ட தேவை­களை பூர்த்தி செய்­வது பணி­ய­கத்தின் கட­மை­யாக வரை­ய­றுக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் மிகவும் தாம­திக்­கப்­பட்டு விட்ட காணாமல் போனோருக்­கான பணி­ய­கத்தை உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு அர­சாங்­கத்­திடம் சர்­வ­தேச மன்­னிப்­புச்­சபை கோரி­யுள்­ளது.

இது தொடர்­பாக, சர்­வ­தேச மன்­னிப்புச் சபையின் தெற்­கா­சியப் பணிப்­பாளர் பிராஜ் பட்­நாயக் வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில்,

மக்கள் இன்னும் நீண்ட காலத்­துக்கு காத்­தி­ருக்க முடி­யாது. பத்­தா­யி­ரக்­க­ணக்­கான குடும்­பங்கள் ஏற்­க­னவே நீண்ட காலம் காத்­தி­ருந்து விட்­டன. எனவே  சட்டம் உரு­வாக்­கப்­பட்­டுள்ள நிலையில் கூடிய விரைவில் காணாமல் போனோ­ருக்­கான பணி­யகம் ஆரம்­பிக்­கப்­பட வேண்டும்.

பாதிக்­கப்­பட்ட மக்­களின் காயங்­களை நீதியால் மாத்­தி­ரமே குணப்­ப­டுத்த முடியும். அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில், காணாமல் போனோருக்கான பணியகத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என தெரிவித்துள்ளார்.