''ஹலோ ஹலோ... கவ­ன­மாக இருங்கள்''

Published By: Robert

25 Jun, 2017 | 10:07 AM
image

நாட்டின் பல பாகங்­க­ளிலும் உள்­ள­வர்­களின் கைத் தொலை­பே­சிக்கு வெளி­நாட்டு இலக்­கங்­க­ளி­லி­ருந்தும் ஒரு­முறை மாத்­திரம் ஒலித்து ஓயும் அழைப்­புகள் வரு­வ­தா­கவும் அது  குறித்து எச்­ச­ரிக்­கை­யாக இருக்­கு­மாறும் பாவ­னை­யா­ளர்கள் கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கின்­றனர்.

ஒரு தடவை மாத்­திரம் ஒலித்து தொல்லை செய்யும் இவ்­வ­ழைப்பு ‘வன் ரிங் ஸ்கேம்’  என அழைக்­கப்­ப­டு­கின்­றது.

 மேற்­கு­றித்த தொலை­பேசி அழைப்பு மோச­டி­யான அழைப்­பென்று கூறப்­ப­டு­கின்­றது. 

அவ்­வா­றான அழைப்­புகள் தொலை­பேசி உரி­மை­யா­ளரின் ஆவலைத் தூண்­டு­வ­தாக அமையும். சர்­வ­தேச ஊட­கங்கள் வெளி­யிட்­டுள்ள செய்­தி­யொன்றில் இவ்­வா­றான சூழ்ச்­சியில் சிக்கும் கைத்­தொ­லை­பேசி உரி­மை­யா­ளர்கள் தொலை­பேசி இணைப்­புக்கு மாத்­திரம் 19.95 அமெ­ரிக்க டொலரை செல­வி­டு­வ­தா­கவும் அதை­விட உரை­யாடல் இடம்­பெறும் காலத்­திற்­காக 9 அமெ­ரிக்க டொலரை செல­வி­டு­வ­தா­கவும் குறிப்­பி­டப்­ப­டு­கி­றது.

சில வேளை­களில் உங்­க­ளுக்கு தெரி­யாத இலக்­கங்­களில் இருந்து குறுஞ் செய்­திகள் கிடைக்கக் கூடும்.

அவ்­வா­றான செய்­திகள் அநே­க­மா­ன­வற்றில் ‘தயவு செய்து விரைவில் மீண்டும் அழை­யுங்கள்’ என குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும். இவ்­வா­றான குறுஞ் செய்­தி­க­ளுக்கு பதில் அளிக்­கும்­போது மேலே குறிப்­பிட்ட விதமே அனைத்தும் இடம்­பெறும்.

மோச­டி­யான அழைப்­புகள் எமது நாட்­டுக்கு எந்த நாட்­டி­லி­ருந்து கிடைக்­கின்­றன? அவற்றின் இலக்கக் குறி­யீ­டுகள் என்ன என்­பது தற்­போது அறி­யப்­பட்­டுள்­ளது.

அதன்­படி புரூண்டி, மலாவி, பாகிஸ்தான் மற்றும் பெல­ரூ­சியா இராச்­சி­யங்கள் மற்றும் மேற்­கிந்­தியத் தீவு­க­ளி­லி­ருந்து பல­ருக்கு மோச­டி­யான அழைப்­புகள் கிடைத்­துள்­ளன.

+268, 809, 876, 872, 254 மற்றும் 473 என்னும் இலக்க குறி­யீட்­டு­க­ளி­லி­ருந்து கிடைக்கும் அழைப்­புகள் மோச­டி­யா­னவை என அறி­யப்­பட்­டுள்­ளது.

இதைத் தவிர அமெ­ரிக்கா மற்றும் கரீ­பியன் தீவு இராச்­சி­யத்­தி­லி­ருந்தும் அழைப்­புகள் கிடைத்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

இவ்­வா­றான மோச­டி­யான உபா­யங்­க­ளி­லி­ருந்து தப்­பு­வ­தற்கு கைத்­தொ­லை­பேசி பாவ­னை­யா­ளர்­களும் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் அவ்­வா­றான அழைப்­புகள் குறித்து அவ­தா­னத்­துடன் இருக்க வேண்டும்.

தான் இதுவரை அறியாத சர்வதேச தொலைபேசி இலக்கங்களிலிருந்து அழைப்பொன்று வந்து தவிர்க்கப்பட்டிருந்தால் அந்த இலக்கத்துக்கு மீண்டும் அழைப்பை ஏற்படுத்த வேண்டாமென தொலைத்தொடர்பு துறையைச் சேர்ந்த நிபுணர்கள் அறிவுறுத்துகின்றார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51