13 ஆவது திருத்தச்சட்டத்தில் இருந்து தீர்வை நோக்கி நாம் பயணிப்போம் : கர்தினால் மல்கம் ரஞ்சித் யாழில் தெரிவிப்பு

Published By: Priyatharshan

24 Jun, 2017 | 09:56 AM
image

இனப்­பி­ரச்­சினை தீர்­வாக உரு­வாக்­கப்­பட்ட 13ஆவது திருத்­தச்­சட்­டத்தில் இருந்து நிரந்த அர­சியல் தீர்வு நோக்கிச் செல்ல வேண்டும் என கத்­தோ­லிக்க திருச்­ச­பையின் கர்­தினால் பேராயர் மல்கம் ரஞ்சித் தெரி­வித்­துள்ளார். 

1958ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட தனிச் சிங்­களச் சட்டம் இன்று பல பிரச்­சி­னை­க­ளுக்கு கார­ண­மாக அமைந்­து­விட்­டது என்றும் பேராயர் மல்கம் ரஞ்சித் குறிப்­பிட்டார்.

யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்­லூ­ரியின் பரி­ச­ளிப்பு விழா நேற்று இடம்­பெற்­றது. இந்த நிகழ்வில் பிர­தம அதி­தி­யாகக் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் கூறு­கையில்;

இல்­லா­ததைப் பற்றி பேசு­வதை விட இருக்­கின்ற விடயம் ஒன்றில் ஆம்­பித்து முன்­நோக்கிச் செல்ல வேண்டும். சிலர் இல்­லா­ததைப் பேசு­கின்­றனர். ஆகவே இருக்­கின்ற 13 ஆவது திருத்­தச்­சட்­டத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு தீர்­வுக்­கான வழியை தேட முடியும் என்று ஆயர் சுட்­டிக்­காட்­டினார்.

1991ஆம் ஆண்டு யுத்தம் கடு­மை­யாக இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்த காலத்தில் யாழ்.மாவட்டம் கிளி­நொச்­சி­யுடன் துண்­டிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், முன்னாள் ஆயர் தியோ­குப்­பிள்ளை ஆண்­ட­கையின் பொன், வெள்ளி, பவள விழாவில் கலந்­து­கொள்­வ­தற்­காக சேறும் சக­தியும் நிறைந்த கொம்­படிப் பாதையால் பல சிர­மங்களுக்கு மத்­தியில் யாழ்ப்­பா­ணத்­திற்கு வந்­த­தா­கவும் ஆயர் ஞாப­க­மூட்­டினார்.

தமி­ழர்கள் தங்­களை இரண்டாம் தர பிர­ஜை­க­ளாக கருதும் நிலையை தனிச் சிங்­களச் சட்­டமே ஏற்­ப­டுத்­தி­யது. அத­னால்தான் யுத்தம் ஆரம்­ப­மா­கி­யது என்று கூறிய ஆயர், ஒற்­று­மையை கட்­டி­யெ­ழுப்பக் கூடிய தீர்வை நோக்கி ஒன்­றாக பய­ணிப்போம் என்று வலி­யு­றுத்­தினார்.

கத்­தோ­லிக்க திருச்­ச­பையின் பாட­சா­லைகள் மேலும் வளர்ச்­சி­ய­டைய வேண்டும் என்று வலி­யு­றுத்­திய ஆயர் சென்.பற்றிக் கல்லூரி கல்விமான்கள் பலரையும் சமூகப் பிரக்ஞையுடைய பலரையும் உருவாக்கியுள்ளது. இதையிட்டு  பெருமைப்படுவதாகவும் தெரிவித் தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37