டெங்கு காய்ச்­ச­லினால் பாதிக்­கப்­பட்டு நீர்­கொ­ழும்பு மாவட்ட வைத்­தி­ய­சாலையில் ஏழு மாத கர்ப்­பிணித் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மினு­வாங்­கொட வத­கொவ்வ பிர­தே­சத்தைச் சேர்ந்த நால­வத்த அப­ய­சிங்­க­அப்­பு­ஹா­மி­லாகே தொன் துலானி உதாரி அபே­சிங்க (29 வயது) என்று ஏழு மாத கர்ப்­பி­ணித்­தாயே டெங்கு காய்ச்­ச­லினால் உயிரிழந்தவ­ராவார்.

மர­ண­ம­டைந்த பெண்ணின் தந்­தை­யான ஓய்­வு­பெற்ற பொலிஸ் பரி­சோ­தகர் லுலா­னந்த கபில சிறி­ம­கன மரண விசா­ர­ணையின் போது சாட்­சி­ய­ம­ளிக்­க­கையில் கூறி­ய­தா­வது,

எனது மகள் கடு­மை­யாக சுக­யீ­ன­முற்­றி­ருந்தார். அவர் தனது முத­லா­வது குழந்­தையை பிர­ச­விக்­க­வி­ருந்தார். டெங்கு காய்ச்­ச­லினால் பாதிக்­கப்­பட்ட நிலையில் வைத்­தி­ய­சா­லையின் மூன்றாம் இலக்க வார்ட்டில் நான்கு தினங்­க­ளாக சிகிச்சை பெற்றும் பய­ன­ளிக்­க­வில்லை. மூன்றாம் இலக்க வார்ட்டில் கடமையில் இருந்த வைத்­தியர் உட்­பட உத்­தி­யோ­கத்­தர்கள் எனது மகள் தொடர்­பாக இதை­விட அக்­கறை செலுத்தி வைத்­தி­ய­சா­லையில் அமைக்­கப்­பட்­டுள்ள டெங்கு வார்ட்டில் எனது மகளை அனு­ம­தித்து சிகிச்சை அளித்­தி­ருந்தால் அவர் காப்­பாற்­றப்­பட்­டி­ருப்பார்.

நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையின் உதவி சட்ட வைத்­திய அதி­காரி கே.எல்.எம்.ஏ. பெரேரா பிரேத பரி­சோ­தனை செய்து வெளியிட்­டுள்ள அறிக்­கையில்இ கடுமையான டெங்கு காய்ச்சலினால் ஏற்பட்ட பாதிப்பால் உடலில் உள்ளு­றுப்புக்கள் செயலிழந்து ஏற்பட்ட மரணம் இதுவென குறிப்பிட் டுள்ளார்.