இருவேறு இடங்களில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 9  பேர் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேபீல்ட் தோட்டம் மேபீல்ட் பிரிவில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 7 பேரும், கொட்டகலை டெரிக்கிளயார் தோட்டத்தில் தேயிலை மலையில் பணியில் இருந்த 2 தொழிலாளர்களும் இவ்வாறு குளவி கொட்டுக்கிழக்காகியுள்ளனர். இச்சம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 9 பேரில் 2 பேர் ஆண் தொழிலாளர்கள் எனவும், 7 பேர் பெண் தொழிலாளர்கள் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த 9 பேரில் 3 பெண் தொழிலாளர்கள் மாத்திரம் தொடர்ந்தும் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனையோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.