பொறுமை காத்த முஸ்லிம் மக்களுக்கு நன்றி : பிரதமர்

Published By: Robert

23 Jun, 2017 | 09:20 AM
image

ரமழான் மாதத்தின் உண்­மை­யான அர்த்தத்தை வெளிப்­ப­டுத்தும் வகை யில் தம் மீதான வன்­மு­றை­களின் போது முஸ் லிம் மக்கள் பொறுமை காத்­த­தற்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நன்றி தெரிவித்தார்.

பிர­த­மரின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­ல­மான அலரி மாளி­கையில் நேற்று இடம்­பெற்ற இப்தார் தின நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

 அவர் மேலும் தெரி­விக்­கையில்,

ரமழான் மாதத்தை நாம் பக்தி, பொறுமை மற்றும் கரு­ணை­யுடன் கடக்­கின்றோம். குறிப்­பாக தற்­போ­தைய ரமழான் காலத்தில் தம்மை ஏசி­னாலும் தம்­மீது தாக்­குதல் நடத்­தி­னாலும் முஸ்லிம் மக்­களின் பொறு­மைக்காக நான் நன்றி கூறு­கின்றேன்.

விசே­ட­மாக ரமழான் பண்­டி­கையின் உண்­மை­யான அர்த்தம் இதனால் வெளிப்­ப­டு­கின்­றது. அத்­துடன் நாட்டில் ஏற்­பட்ட அனர்த்­தத்தின் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு இஸ்­லா­மி­யர்கள் தமது பண்­டி­கை­யி­னையும் கொண்­டா­டாமல் பணத்தை வழங்­கி­வைத்­தார்கள்.

இலங்­கை­யர்­க­ளுக்­கா­கவே அந்தப் பணத்தை வழங்­கி­னார்கள். பாதிக்­கப்­பட்ட கிரா­மங்­களில் அதி­க­மாக சிங்­கள மக்­களே வசித்­தார்கள். எனவே அதற்கும் இங்கு நான் நன்றி கூற வேண்டும். இவ்­வா­றி­ருக்­கின்ற போது ஒரு மதம் உரு­வா­கி­யுள்­ளதை அந்த மதத்­தைப் பின்­பற்­று­வர்கள் மட்­டு­மன்றி அதன் தோற்­றத்தை நம்­பு­கின்­ற­வர்­களும் ஏற்­றுக்­கொள்­வார்கள். அதனால் மதம் என்­பது நல்­லி­ணக்­கத்தின் ஒரு பகு­தி­யா­கின்­     றது.

நாம் இஸ்லாம் மற்றும் புத்த தர்­மத்தால் மனி­தர்­களின் மனங்­களை சுகப்­ப­டுத்­தவே முனை­கின்றோம். அதனால் உலக மக்களை சுகப்­ப­டுத்­தவும் எதிர்­பார்­க்கின்றோம். அத­னையே நபிகள் மற்­று­மொ­ரு­வரை மன­த­ள­விலும் உடல் ரீதி­யிலும் துன்­பு­றுத்­தாமல் இருக்­கின்­ற­வ­ரையே அல்லாஹ் ஏற்­றுக்­கொள்வார் என்று கூறி­யுள்ளார். 

அதேபோல் புத்த மதத்­திலும்  மற்­ற­வ­ருக்கு நெருக்­கடி கொடுக்­கா­மலும் உயிரை பறிக்­கா­மலும் இருக்க வேண்டும் என்ற போதனைகள் உள்­ளன. அதனால் நாங்கள் எல்லா மதத்­தையும் மதிக்­கின்றோம்.

இஸ்­லாமில் ஒரு கூற்று உள்­ளது. (உங்கள் மதம் உங்­க­ளுக்கு. எமது மதம் எமக்கு என்பர்) அதற்­க­மை­யவே இன்று நாங்கள் செயற்­ப­டு­கின்றோம். அத­னையே அசோக மன்­னனும் நாம் சகல மதங்­க­ளையும் மதிக்க வேண்டும் என்று கூறி­யுள்ளார்.

அதனால் மனதில் குரோ­தங்­களை கொண் ­ட­வர்கள் புத்த மதத்தின் போர்வையில் மறைந்து பாது­காப்பு பெற முடி­யாது. அவ்­வா­றா­னவர்­க­ளுக்கு பாது­காப்புக் கொடுக்க வும் முடி­யாது. இன்று சகல மக்­களும் இணைந்து சக­வாழ்வை உரு­வாக்க  முனை­கின்­றார்கள்.  

அதற்­கா­கவே சட்­டத்தின் ஆட்­சியை வலுப்­ப­டுத்­து­கின்றோம். அதனால் எந்த ஒரு நபரும் சட்­டத்­திற்கு அப்பால் சென்று செயற்­பட முடி­யாது. எனவே சகலரும் சட்டத்தை மதித்து செயற்பட வேண்டியது அவசியமாகும். இன்று நாட்டு மக்கள் ஒன்றிணைந்து கொண்டிருக்கின்றார்கள்.

எனவே முஸ்லிம் மக்கள் இந்த நாட்டில் சமாதானத்தை உண்டுபண்ண மேற் கொண்ட முனைப்புக்களுக்கும் நன்றி கூற வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58