முழங்காவில் பொலிஸ்நிலையம் பொது மக்களால் முற்றுகை

Published By: Priyatharshan

22 Jun, 2017 | 03:26 PM
image

சுமார் முந்நூறுக்கும்  மேற்ப்பட்ட  கிராமமக்கள், மதத் தலைவர்கள்  மற்றும் பொது அமைப்புகள் நாச்சிக்குடா  சந்தியில் இருந்து முழங்காவில் பொலிஸ்  நிலையம் வரை பேரணியாகச் சென்று பொலிஸ் நிலையத்தை  முற்றுகையிட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாக எமது கிளிநொச்சிப் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 17 ம் திகதி இரவு முழங்காவில் கரியாலை நாகபடுவான் தேவாலய திருவிழாவை முடித்துக் கொண்டு வீதிக்கு வந்த பதின்மூன்று வயதான அ.அபினேஸ் என்ற  சிறுவனை மன்னார் பகுதியில் இருந்து வந்த  கார் மோதிவிட்டு விபத்தையடுத்து கார் தப்பியோட்டிருந்தது  குறித்த விபத்தில் காயமடைந்த சிறுவன்  கோமா நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்  நேற்று நான்குமணிளவில்  உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துத் தொடர்பில் முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் குடும்பத்தினரால் முறைப்பாட்டு செய்யப்பட்டிருந்ததுடன் தப்பி ஓடிய காரின் ஒரு இலக்கத்தகடு வீழ்ந்த நிலையில் அதன் இலக்கமும் பொலிஸாரிற்கு வழங்கப்பட்டிருந்தது  எனினும் பொலிசாரால்  நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறி முந்நூறுக்கும்  மேற்ப்பட்ட  கிராமமக்கள், மதத் தலைவர்கள்  மற்றும் பொது அமைப்புகள் நாச்சிக்குடா  சந்தியில் இருந்து முழங்காவில் பொலிஸ்  நிலையம் வரை பேரணியாகச் சென்று பொலிஸ் நிலையத்தை  முற்றுகை இட்டனர். 

 அதனை அடுத்து  அங்கு வருகைதந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்  சந்தேக நபரை கைதுசெய்யும் வேலைத்திட்டம் நடைபெற்றுக் கொண்டுள்ளதாகவும்  இன்று சந்தேகநபர் கட்டாயம் கைது செய்யப்பட உள்ளார். நாளை எமது பொலிஸ் நிலைய கூட்டினுள் அவரைக் காணமுடியும் என  அவரால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக தற்போது முற்றுகை கைவிடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08