சம்மாந்துறை  மலையடிப் பிரதேசத்தில் வீதியில் குப்பை கொட்டிய மற்றும் வடிகானுக்குள் கழிவு நீரை விட்ட குற்றச்சாட்டின் பேரில் இரு நபர்கள் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய சுற்று சூழல் பாதுகாப்பு பொறுப்பதிகாரி எம்.எஸ். அப்துல் மஜீட் தெரிவித்தார்.

பொது மக்களால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

குறித்த நபர்களை நாளை சம்மாந்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் சுற்று சூழல் பாதுகாப்பு பொறுப்பதிகாரி எம்.எஸ். அப்துல் மஜீட் மேலும் தெரிவித்தார்.